15
June, 2026

A News 365Times Venture

15
Monday
June, 2026

A News 365Times Venture

“ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நல்லவர்தான்; ஆனால்…" – ல.ஜ.க-விலிருந்து விலகியது குறித்து தாடி பாலாஜி

Date:

தேர்தலுக்கு முன் லட்சிய ஜனநாயகக் கட்சியில் சேர்ந்த நடிகர் தாடி பாலாஜி, தற்போது அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

ஆரம்பத்தில் திமுக அனுதாபி எனச் சொன்னார்கள். விஜய் கட்சி தொடங்கிய போது அவரது பெயரையெல்லாம் பச்சை குத்தினார். ஆனாலும் அங்கு என்ன சிக்கல்களை எதிர்கொண்டாரோ தெரியவில்லை, திடீரென சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய ‘லட்சிய ஜனநாயகக் கட்சி’யில் போய் சேர்ந்தார்.

கட்சியில் அவருக்கு மாநில அளவிலான பொறுப்பையும் வழங்கினார் சார்லஸ்.

இந்தச் சூழலில் அங்கிருந்தும் வெளியேறி இருக்கிற நிலையில், ‘என்ன நடந்தது’ என பாலாஜியையே தொடர்பு கொண்டு கேட்டோம்.

தாடி பாலாஜி

”தமிழருவி மணியன் சார் கொஞ்ச நாள் முன்னாடி அவரு கட்சியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைச்சப்ப ‘பிரமாண்ட இணைப்பு’னு அதைக் கலாய்ச்சு சோஷியல் மீடியாவுல கமென்ட்டுகள் பறந்தன.. அந்த ரேஞ்சுக்கு என்னையும் கலாய்ச்சிருக்கிறதா நண்பர்கள் சிலர் சொன்னாங்க. நானே ஒரு காமெடி நடிகன். என்னை வச்சு காமெடியா? அப்படியே ஃபீல் ஆகி உட்கார்ந்துடுவேன் பாருங்க‌” என்றவரிடம், ‘சரி விஷயத்துக்கு வாங்க’ என்றோம்.

“புதுச்சேரியை மையமாக் கொண்டு அவர் தொடங்கின கட்சிக்கு விருப்பப் பட்டுதான் போனேன். போனதும் எனக்கு பொறுப்பும் அறிவிச்சார். அவர் நல்ல மனுஷந்தான். ஆனா என்னனு தெரியல, புதுசா ஒருத்தர் கட்சிக்கு வந்துட்டா பழைய ஆளுக்கு மரியாதை குறைஞ்சிடுது. அவரா அப்படி நடந்துக்கிடுறாரா அல்லது சுத்தி இருக்கிறவங்க அவரை அப்படி வழி நடத்துறாங்களா தெரியல. லட்சிய ஜனநாயகக் கட்சினு பேர் வச்சிருக்கார். என்ன லட்சியம்னும் தெரியல. ஜனநாயகமும் இல்லைனு தெரிஞ்ச பிறகு அங்க இருக்கிறதுல என்ன பிரயோஜனம்?

பல பேரை கட்சியில் சேர்த்தார். திடீர்னு சேர்த்தவங்களை அவராகவே கட்சியை விட்டு நீக்கினார். காரணம் அவருக்கே வெளிச்சம். எதுக்கு வம்புன்னு நானே வெளியில போயிடுறேன்னு முறைப்படி ராஜினாமா கடிதம் அனுப்பிட்டு வெளியில வந்துட்டேன்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`56' ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு அதிரடி!

தமிழகக் காவல்துறையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் எஸ்.பி அந்தஸ்திலான 56 உயர்...

TASMAC: “இது வெறும் 'எண்' துடைப்பு" – டாஸ்மாக் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மாதம் ரூ.4,000 கோடியும், கடந்த...

CJP: “இது கோழைத்தனத்தின் அடையாளம்" – தாக்குதலுக்குப் பின் அபீஜித் திப்கே பதிவு!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத் ஸ்மாரக் பகுதியில், இன்று மதியம்...

`மனம் பதறுகிறது; மூன்று வயது குழந்தை… சமூகம் பேரழிவை நோக்கி…' – பா.ரஞ்சித் ஆதங்கம்!

கும்மிடிப்பூண்டியில் 3-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை...