15
June, 2026

A News 365Times Venture

15
Monday
June, 2026

A News 365Times Venture

TASMAC : 'காலிபாட்டில் வாங்குறதுக்கு ஒரு மெஷினாய்யா…' – கொந்தளிக்கும் மதுபிரியர்கள்!

Date:

டாஸ்மாக் கடைகளில் காலிபாட்டில்களை திரும்பப்பெற வேண்டுமென நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் காலிபாட்டில்களை சேகரிக்க நவீன மெஷின் ஒன்று இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் நாளே மெஷின் முறையாக வேலை செய்யாததால் மதுபிரியர்கள் கோபமடைந்து விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரபரப்பை கிளப்பினர்.

காலிபாட்டில்கள்

நீதிமன்றம் காலிபாட்டில்களை திரும்பப்பெற உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், காலிபாட்டில்களை திரும்பப் பெறுவதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறதென டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகின்றனர். காலிபாட்டில்களை சேகரிக்கும் நடைமுறைக்கு எதிராக போராட்டமும் நடத்தியிருக்கின்றனர். இதை சரி செய்ய சோதனை அடிப்படையில் மது பாட்டில்களை சேகரிக்கும் மெஷின் ஒன்றை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

சோதனை முயற்சியாக சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் அந்த மெஷின் இன்று முதல் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மெஷினில் முதலில் நம்முடைய ஜிபே QR கோர்டை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர், காலிபாட்டிலில் உள்ள QR கோர்டை ஸ்கேன் செய்ய வேண்டும். அதன்பின் பாட்டிலை மெஷினுக்குள் போட்டால் பாட்டிலுக்கு கூடுதலாக வாங்கப்படும் அந்த 10 ரூபாய் நம்முடைய அக்கவுன்ட்டில் ஏறிவிடும். இதுதான் நடைமுறை. ஆனால், முதல் நாளான இன்றே அந்த மெஷின் கோளாறானது. பல காலிபாட்டில்களை அந்த மெஷினால் ஸ்கேன் செய்யவே முடியவில்லை. ஏற்கெனவே போதையில் இருக்கும் மதுபிரியர்கள், ஒரு முறை போனை இன்னொரு பாட்டிலை என அடுத்தடுத்து ஸ்கேன் செய்யவும் தடுமாறுகின்றனர்.

காலிபாட்டில் சேகரிக்கும் மெஷின்
காலிபாட்டில் சேகரிக்கும் மெஷின்

தட்டு தடுமாறி ஸ்கேன் செய்தாலும் `உங்களின் QR கோர்டு தவறாக உள்ளது’ என பாட்டிலை ஏற்க மறுப்பதால் எரிச்சலாகும் மதுபிரியர்கள், டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்துக்குச் செல்கின்றனர். ’10 ரூபாய் கூடுதலாய் வாங்குறதை நிறுத்த முடியல, அதை வாங்குறதுக்கு இப்படி ஒரு மெஷின் வேற…அதுவும் ஓட்டை மெஷினை வச்சுருக்கானுக, யார் வந்தாலும் எதுவும் மாறாது’ என தலையில் அடித்து கொதித்துப் போய் பேசிவிட்டுச் செல்கின்றனர் மதுபிரியர்கள்.

காலிபாட்டில் சேகரிக்கும் மெஷின்
காலிபாட்டில் சேகரிக்கும் மெஷின்

மெஷினை நிறுவியிருக்கும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் பேசுகையில், ‘முதல் நாள் என்பதால் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இது சோதனை முயற்சிதான். குறைகளை விரைவில் சரி செய்வோம்’ என்கின்றனர்.

`மன உளைச்சல்ல குடிக்க வந்தா இன்னும் மன உளைச்சல் ஆக்குறீங்களேடா!’ என விசும்பிச் செல்கின்றனர் மதுபிரியர்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`56' ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு அதிரடி!

தமிழகக் காவல்துறையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் எஸ்.பி அந்தஸ்திலான 56 உயர்...

TASMAC: “இது வெறும் 'எண்' துடைப்பு" – டாஸ்மாக் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மாதம் ரூ.4,000 கோடியும், கடந்த...

CJP: “இது கோழைத்தனத்தின் அடையாளம்" – தாக்குதலுக்குப் பின் அபீஜித் திப்கே பதிவு!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத் ஸ்மாரக் பகுதியில், இன்று மதியம்...

`மனம் பதறுகிறது; மூன்று வயது குழந்தை… சமூகம் பேரழிவை நோக்கி…' – பா.ரஞ்சித் ஆதங்கம்!

கும்மிடிப்பூண்டியில் 3-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை...