26
June, 2026

A News 365Times Venture

26
Friday
June, 2026

A News 365Times Venture

`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' – மதுரை ஆதீனம்

Date:

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனுார் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனுார் அக்னீஸ்வரர் கோயிலில், ராஜகோபுரம், சுற்றுச்சுவர் திருப்பணிகள் முடிந்துள்ளது. பிரகாரங்கள் மற்றும் விமானங்கள் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் அரிசி உள்ளிட்டவை வழங்கப்படுவது போல், அம்மன் கோயில் விழாக்களுக்கும் அரசு சார்பில், அரிசி உள்ளிட்டவை வழங்க வேண்டும்.

கஞ்சனூரில் மதுரை ஆதீனம்

வரும் 2028ம் கும்பகோணம் மகாமக பெருவிழா மிகப்பெரிய விழாவாக கொண்டாட அரசு முயற்சிக்கும் என்பது எங்களது நம்பிக்கை. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்பது இல்லாமல், அரசியலில் கடுமையாக உழைத்து அனுபவ ரீதியாக மக்களின் பிரச்னைகளை உணர்ந்தவர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும்.

சினிமா அரசியல் தேவையில்லை. சினிமா சினிமாவாகவே இருக்க வேண்டும். சினிமாவில் முன்பெல்லாம் கருத்துள்ள படங்களை முன்னிறுத்தி வெளியிட்டனர். ஆனால், தற்போது வரக்கூடிய படங்கள் கருத்து இல்லாத வகையில் இருக்கிறது. சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு. மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல், மக்களுக்காக பல்வேறு துறைகளில் தொண்டு செய்யக்கூடியவர்கள் போற்றப்பட வேண்டும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“திமுக-வை பாஜக பக்கம் இழுத்துச் செல்கிறார் ஆ.ராசா’’ – அமைச்சர் வன்னி அரசு சூசகம்!

ராணிப்பேட்டையில் இன்று, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்....

நீலகிரி: ஒற்றை மாணவர் சேர்க்கைகூட நடைபெறாத அரசு தொடக்கப் பள்ளிகள்! – அதிகாரிகள் சொல்வதென்ன?

பழங்குடிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில், முதல்...

`ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள்; செயல்பாடுகளில் மர்மம்; CBCID விசாரணை வேண்டும்' – பெ.சண்முகம் அறிக்கை

`ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள் நடக்கிறது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டும்'...

`கர்நாடக அரசின் பிராக்ஸி அரசா இந்த அரசு?' – ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனத்திற்கு அதிமுக எதிர்ப்பு

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட...