27
June, 2026

A News 365Times Venture

27
Saturday
June, 2026

A News 365Times Venture

'ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய பதவி வழங்கிய முதல்வர் விஜய்!' – விவரம் என்ன?

Date:

ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட நாராயணாவுக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பொறுப்பை கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய்.

வெங்கட நாராயணா

திரையுலகில் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தை தயாரித்திருந்தது கர்நாடகாவை சேர்ந்த கே.வி.என் நிறுவனம். படத்தை கடந்த பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், படத்தின் தணிக்கையில் ஏற்பட்ட பிரச்னையால் அந்தப் படம் இன்னும் வெளியாகாமல் முடங்கி கிடக்கிறது. இடையில் சட்டமன்றத் தேர்தல் நடந்து விஜய் முதல்வரும் ஆகிவிட்டார். விஜய் ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரை சந்தித்த போதும் கே.வி.என் நிறுவனத்தின் உரிமையாளர் கே.வெங்கட நாராயணா உடன் இருந்தார். இந்நிலையில், இன்று தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஆளுநருடனான சந்திப்பில் வெங்கட நாராயணா
ஆளுநருடனான சந்திப்பில் வெங்கட நாராயணா

தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகி சில நிமிடங்களே ஆகும் நிலையில், முதல் ஆளாக இந்த நியமனத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தவெக அரசு அமைய உழைத்தவர்கள் பொறுப்புகளில் இருப்பதில் என்ன தவறு?' – அமைச்சர் நிர்மல்குமார்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்பில் ஆய்வுக் கூட்டம்...

தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் மீது வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவரான...