23
August, 2026

A News 365Times Venture

23
Sunday
August, 2026

A News 365Times Venture

`சட்டமன்ற நேரலை பார்த்தோம்; JCD பிரபாகர் சிறப்பு என்றார்' – ஸ்டாலின் சந்திப்பு குறித்து வைரமுத்து

Date:

நேற்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இந்தச் சந்திப்பில் இருவரும் சட்டமன்றம் குறித்துப் பேசிக்கொண்டதைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைரமுத்து.

வைரமுத்துவின் பதிவு

“முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நட்பின் நிமித்தமாய் நலம்கேட்கச் சென்றேன்; பொன்னாடை அணிவித்தேன்.

ஞானபீடத்தின் பெருமையறிந்து வீட்டுக்கே வந்து வாழ்த்திய அந்நாள் முதலமைச்சர், பெற்றுவந்த விருதுக்காக மீண்டுமொரு பொன்னாடை அணிவித்தார்.

பொன்னாடைக்குப் பொன்னாடை.

ஜே.சி.டி.பிரபாகர்

“எதைக் கொடுக்கிறாயோ அதையே பெறுவாய்” என்ற முதுமொழி என் மூளைக்குள் ஓடியது.

ஒருவரை ஒருவர் கொண்டாடிக் கொண்டோம்.

சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை முக்கால் மணிநேரம் இருவரும் கண்டுகொண்டிருந்தோம்.

“ஜே.சி.டி பிரபாகர் சிறப்பாக நடத்துகிறார் சட்டமன்றத்தை” என்றார் தி.மு.க தலைவர்.

“சட்டமன்றத்தின் ஆட்ட நாயகன்” என்று சமூக ஊடகங்கள் சபாநாயகரைப் பேசுகின்றன என்றேன்.

“அப்படியா” என்றார்.

ஓர் அழகான காஃபி குடித்து முடித்து வாழ்த்தி விடைகொண்டேன்”.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"தமிழர்களின் உயிர் அல்பமானது கிடையாது" – கொதிக்கும் ஜோதிமணி

காவிரி விவகாரம், கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது போன்றவைத் தொடர்பாக காங்கிரஸ்...

"ஏன் நாங்க கோட்-சூட் போடக்கூடாதா? ஆங்கிலத்தில் பேசக்கூடாதா?" – கொதிக்கும் அமைச்சர் கீர்த்தனா

சிவகாசியில் தவெக 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (ஆகஸ்ட்....

Canada Vs US: “தாக்கப்படும் போதுதான் போர்; நாங்கள் தாக்கப்பட்டிருக்கிறோம்" – கனடப் பிரதமர் காட்டம்

அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி...

”சர்க்காரா? சர்க்கஸ் கம்பெனியா? எனக் கேட்கும் அளவுக்கு இந்த அரசின் பர்பாமன்ஸ் இருக்கு” – உதயநிதி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக இல்லத் திருமண விழாவில் கலந்து...