22
August, 2026

A News 365Times Venture

22
Saturday
August, 2026

A News 365Times Venture

‘இந்தியாவிலேயே எங்கும் 'இது' நடந்திருக்காது; தலைமைச் செயலாளர் பதவி விலக வேண்டும்' – பெ.சண்முகம்

Date:

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக இடதுசாரிகளுக்கு எதிரான சில காட்சிகள் அரங்கேறின.

இதை எதிர்த்து இன்று (22.08.2026) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டனப் போராட்டத்தை நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சென்னையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் பெ. சண்முகம் தலைமை தாங்கினார். . அதே போல், மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் மக்களவை எம்.பி சு.வெங்கடேசன் தலைமையேற்று போராட்டத்தினை நடத்தினார்.

சென்னையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் பெ. சண்முகம், “இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கவும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை ஒடுக்கவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு வன்மையான கண்டனத்திற்குரியது.

சிபிஎம் போராட்டம்

கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி, தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு குறித்த கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின் அடிப்படையில், கல்லூரி கல்வி ஆணையர் மற்றும் உயர்கல்வித்துறைச் செயலாளர் ஆகியோர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளனர்.

ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்றதொரு சம்பவம் இந்தியாவிலேயே வேறு எங்கும் நடைபெற்றது இல்லை. தலைமைச் செயலாளரின் இந்த நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது.

ஜனநாயகத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் விரோதமாகச் செயல்படும் அவர், தலைமைச் செயலாளர் என்ற உயர் பதவியில் நீடிப்பதற்கு தகுதியுமற்றவர். ஆகவே, ‘தமிழக அரசு உடனடியாக அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்”. என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`சட்டமன்ற நேரலை பார்த்தோம்; JCD பிரபாகர் சிறப்பு என்றார்' – ஸ்டாலின் சந்திப்பு குறித்து வைரமுத்து

நேற்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இந்தச் சந்திப்பில்...

'கண்ணின் இமை போல என்னைக் காத்து' – 41வது திருமண நாளில் மனைவியை நினைவுகூர்ந்த ஜேசிடி பிரபாகர்

ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான ஜே.சி.டி. பிரபாகரின்...

DMK: கைகொடுக்குமா சீரமைப்பு… தி.மு.க-வின் மாற்றங்கள் சொல்வதென்ன?

இன்று நடைபெற்றிருக்கும் தி.மு.க-வின் செயற்குழுவில், அமைப்புரீதியாக மாவட்டங்களை 110 எண்ணிக்கையாக உயர்த்தியும்,...

‘எங்களுக்கு கார் வேண்டாம், எம்.பி அலுவலகம் வேண்டும்’ – ஜோதிமணி எம்.பி கோரிக்கை

கோவை  திவ்யோதயா அரங்கில் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் நடந்தது என்ன...