20
June, 2026

A News 365Times Venture

20
Saturday
June, 2026

A News 365Times Venture

கூட்டத்தில் 9-ல் 6 எம்.பி-க்கள் ஆப்சென்ட்: மம்தா கட்சி பாணியில் பிளவைச் சந்திக்கிறதா உத்தவ் சிவசேனா?

Date:

மகாராஷ்டிராவில் சிவசேனா ஏற்கெனவே 2022ம் ஆண்டு ஒரு பிளவைச் சந்தித்த நிலையில், மீண்டும் தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிளவைச் சந்தித்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் 9 மக்களவை எம்.பி-க்கள் இருந்தனர். அவர்களில் 6 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு செல்வதாக செய்திகள் வெளியானது. நேற்று 6 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் இரண்டு பேர் கையெழுத்திடவில்லை என்று உத்தவ் தாக்கரே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதோடு இன்று உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை டெல்லியில் கூட்டி இருந்தார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இக்கூட்டத்தில் 6 எம்.பி-க்கள் கலந்து கொள்ளவில்லை. வெறும் மூன்று பேர் மட்டுமே பங்கேற்றனர். இது குறித்து மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேயிக்கு சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவுத் தகவல் கொடுத்தார். கூட்டத்தில் கலந்து கொள்ள கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

தாக்கரே, ஷிண்டே

எனவே கலந்து கொள்ளாத எம்.பி-க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தவ் தாக்கரே தயாராகி வருகிறார்.

தாராசிவ் எம்.பி.நிம்பல்கர், சஞ்சய் தினா பாட்டீல் ஆகியோர்தான் சபாநாயகருக்கு கொடுக்கப்பட்ட கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்ற புகார் இருந்தது. ஆனால் அவர்களும் உத்தவ் தாக்கரே கூட்டிய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது தவிர சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தேஷ்முக், நாகேஷ் பாட்டீல், பெளஷாஹேப் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் 6 எம்.பி.க்களும் சிவசேனா(ஷிண்டே)வில் இணைந்துவிட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட நிலை உத்தவ் தாக்கரேயிக்கு ஏற்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி எடுத்த முடிவை ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்கள் ஏற்காததால், திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளது. அதிருப்தி கோஷ்டி தலைவர் ரிதப்ரதா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். கட்சியின் நாடாளுமன்றக் குழுவும் பிளவுபட்டுள்ளது. 20 திரிணாமுல் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்து, தங்கள் குழுவை திரிபுராவைச் சேர்ந்த ‘தேசியவாத காங்கிரஸ் மக்கள் கட்சி’யில் இணைப்பதாக கடிதம் அளித்துள்ளனர். மேலும், மக்களவையில் ஆளும் கட்சி பக்கம் தங்களுக்குத் தனி இருக்கை வசதி ஒதுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மாநிலங்களவை எண்ணிக்கை : `திட்டமிட்டு' முன்னேறும் பாஜக – கையறு நிலையில் காங்கிரஸ்! | முழு அலசல்

'தங்களிடம் பெரும்பான்மை பலம் உள்ளதால் எளிதாக வெற்றி பெறலாம்' என்ற நம்பிக்கையில்...

`சில நாய்கள் விசுவாசமாக இல்லை' – பிரிந்துசென்ற எம்.பி.க்கள் மீது எம்.பி. சஞ்சய் ராவத் சாடல்

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் தங்களை தனி அணியாக...

வேலுமணியிடன் உரசல்; எடப்பாடியின் கொங்கு கணக்கு… செந்தில் பாலாஜியின் மெளனம்! – பரபரக்கும் களம்!

செந்தில் பாலாஜி தி.மு.க-விலிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க-வில் இணைவதாக கரூர் மாவட்டத்தில்...

விஜய் படங்களுக்கு பணியாயாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர்! – மனோஜ் பரமஹம்சாவுக்கு அரசுப் பொறுப்பு

பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 'ஈரம்',...