18
June, 2026

A News 365Times Venture

18
Thursday
June, 2026

A News 365Times Venture

`பி.எம்.ஸ்ரீ திட்டத்தை நிபந்தனைகளுடன் செயல்படுத்த கேரளம் முடிவு' – சிபிஎம்-ஐ விமர்சித்த வி.டி.சதீசன்

Date:

கேரளாவில் கடந்த முறை ஆட்சி செய்த எல்.டி.எஃப் அரசு ஏற்கெனவே மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பி.எம்-ஸ்ரீ கல்வித் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது என்று கேரள காங்கிரஸ் முதலமைச்சர் வி.டி.சதீசன் தலைமையிலான தற்போதைய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஏற்கெனவே விடுவித்த ரூ.99 கோடி மற்றும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.106 கோடி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இரண்டு முக்கிய நிபந்தனைகளை அரசு முன்வைத்துள்ளது. ​இந்த நிபந்தனைகள் குறித்து முதலமைச்சர் வி.டி.சதீசன் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், “பள்ளிகளின் பாடத்திட்டத்தைத் தீர்மானிப்பதில் மாநில அரசின் சுதந்திரத்தில் மத்திய அரசு எவ்விதத்திலும் தலையிடக் கூடாது. அதேபோல், பி.எம்-ஸ்ரீ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திட்டத்தை அமல்படுத்துவோம். மதவாத அஜெண்டாக்களுக்குப் பணியாமல், மாநிலத்தின் கல்வி சுதந்திரத்தை உறுதி செய்த பிறகே இதை முன்னெடுப்போம். மத்திய அரசு நிபந்தனைகளை ஏற்கவில்லை எனில், அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.

முதல்வராகும் வி.டி.சதீசன் பினராயி விஜயனுடன்

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை ஆய்வு செய்யவும், அரசின் கொள்கை முடிவுகளை மத்திய அரசுக்குத் தெரிவிக்கவும் அமைச்சரவை துணைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை அமைச்சர் என்.சம்சுதீன் ஒருங்கிணைப்பாளராகவும், அமைச்சர்கள் ரோசி எம்.ஜான், பி.சி.விஷ்ணுநாத், எம்.லிஜு ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

​எல்.டி.எஃப் அரசு பதவிக்காலத்திலேயே இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், கேரளம் இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாகிவிட்டது என்று குறிப்பிட்ட வி.டி.சதீசன், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலமாகவே சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.99 கோடிக்கும் அதிகமான நிதியை அரசு பெற்றுள்ளதாகவும், தற்போது கூடுதலாக ரூ.106 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க அல்லாத ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பாதிக்காத வகையில் கூட்டாக முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முந்தைய பினராயி விஜயன் அரசின் செயல்பாடுகளை விமர்சித்த முதலமைச்சர் வி.டி.சதீசன், “இத்திட்டத்தில் கையெழுத்திட மாட்டோம் என்று எல்.டி.எஃப் அரசு கூறி வந்த நிலையில், நிதித் துறையின் அனுமதியுடன் ரகசியமாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அமைச்சரவை உறுப்பினர்களுக்கே தெரியாமல், முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருக்குத் தெரிந்தே இது நடந்திருக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

கேரள முன்னாள் அமைச்சர் வி.சிவன்குட்டி

​இதனிடையே, நிலுவையில் உள்ள ரூ.1100 கோடி ‘சமக்ர சிக்ஷா’ நிதி என்பது மத்திய அரசின் கருணையல்ல, மாநிலத்தின் உரிமை என்று அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பி.எம்-ஸ்ரீ திட்டத்தில் இருந்து விலகுவதாக முந்தைய அரசு எந்தக் கடிதத்தையும் அனுப்பவில்லை என்றும், தற்காலிகமாகத் தள்ளிவைக்கவே கடிதம் அனுப்பப்பட்டிருந்தது என்றும் வி.டி.சதீசன் குறிப்பிட்டார். ​முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துப் பேசிய முன்னாள் கல்வி அமைச்சர் வி.சிவக்குட்டி, “பி.எம்-ஸ்ரீ திட்டத்திலிருந்து எல்.டி.எஃப் அரசு ஒரு பைசாகூட வாங்கவில்லை. சமக்ர சிக்ஷா திட்டத்திற்கு கிடைத்த நிதிக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளாமல் முதலமைச்சர் பேசுகிறார்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கூட்டத்தில் 9-ல் 6 எம்.பி-க்கள் ஆப்சென்ட்: மம்தா கட்சி பாணியில் பிளவைச் சந்திக்கிறதா உத்தவ் சிவசேனா?

மகாராஷ்டிராவில் சிவசேனா ஏற்கெனவே 2022ம் ஆண்டு ஒரு பிளவைச் சந்தித்த நிலையில்,...

சி.வி.சண்முகம் அலுவலகத்தில் மீண்டும் வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்! – அதிமுக-வில் ஓயாத சலசலப்பு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையை விமர்சித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்...

தவெக ஆட்சி: "38 நாள், 150 போக்சோ வழக்குகள், 126 பாலியல் குற்ற வழக்குகள்" – இபிஎஸ் கடும் விமர்சனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று...

அமெரிக்கா – இரான் போர் : வரைவு ஒப்பந்தம் முழுமையான அமைதிக்கு இட்டுச்செல்லுமா? | மணிவண்ணன் திருமலை

மேனாள் ஆசிரியர், பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலைஅமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே...