22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

“ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு'' – கரூரில் விசிக ஒட்டிய பரபர போஸ்டர்; நிர்வாகிகள் சொல்வதென்ன?

Date:

நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, ‘ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு’ என்பதை கொள்கையாக அறிவித்த நிலையில், அந்த பாயிண்டை வைத்து, ‘எங்களுக்கும் பங்கு வேண்டும்’ என்று பிரதான அரசியல் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகள் வெளிப்படையாக கேட்கத் தொடங்கியிருக்கின்றன.

அந்த வகையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்தநாளையொட்டி, சென்னையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், ‘2026-ன் துணை முதல்வரே!’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை அச்சடித்து ஒட்டி, தி.மு.க கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தினார்கள்.

ஆனால், அந்த நிர்வாகிக்கு விளக்கம் கேட்டு செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

poster

இந்நிலையில் தான், அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மாநகரப் பொருளாளரான ரஹ்மான் மற்றும் ஆகாஷ் ஆகியோர் சேர்ந்து, அச்சடித்து கரூரில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பேசுபொருளாகியிருக்கிறது.

அந்த போஸ்டர்களில் அம்பேத்கர், திருமாவளவன் புகைப்படங்களுடன், ‘ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு-2026’ என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளது, கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து, ரஹ்மானிடம் பேசினோம். “ஆட்சியில்/அதிகாரத்தில் பங்கு என்பது 20 வருஷத்துக்கு முன்பே பிரகனப்படுத்தப்பட்ட தலைவரோட கொள்கை. கட்சியின் கொள்கை. சமூகநீதி அரசு என்று சொல்கிறார்கள். ஆனால், அதை செயல்படுத்தவில்லை. கீழ்நிலை மக்களை மேல்நிலைக்கு கொண்டுவர ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொடுத்தால் தானே, நிறைவேற்ற முடியும்.

rahman

விளிம்புநிலை மக்களைப் பற்றி எங்களுக்கு தான் தெரியும். எங்கோ ஒரு இடத்தில் இருந்துகொண்டு சமூகநீதி என்று பேசுகிறீர்கள். எங்களுக்கு அதிகாரம் இருந்தால் தான் அதை மாற்ற முடியும். அதனால், இது என்னோட தனிப்பட்ட விருப்பம் இல்லை. கட்சியின் கொள்கையை தலைவருக்கும், மக்களுக்கும் ஞாபகப்படுத்தத்தான் இதை செய்தோம். வன்னியரசுகூட, ’26 சீட்டுகள் வேண்டும்’ என்று வலியுத்தியுள்ளார். நாங்களும் எங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறோம்” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்: 16 நாள்களுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு...

"கம்யூனிஸ்ட்களின் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" – வீரபாண்டியன் பதிலடி

"கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" என்று...

வேலூர்: உயிரோடு இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் கேட்ட விவசாயி – என்னக் காரணம் தெரியுமா?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள கே.ஜி.ஏரியூரைச் சேர்ந்தவர் காந்தி (வயது 47)....

'எதிர்பார்க்கப்பட்டதுதான்' ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதின் கட்சி – காரணம்?

நேற்று (செப்டம்பர் 21) ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமாவின் தேர்தல்...