10
April, 2026

A News 365Times Venture

10
Friday
April, 2026

A News 365Times Venture

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் – கைகொடுத்த `Dark Mode' டெக்னிக்!

Date:

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் பல பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல்கள் நின்று கொண்டிருக்கின்றன.

இதற்கு ஈரான் போர் தான் காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்தக் கப்பலையும் விடமாட்டேன் என்று நிற்கிறது ஈரான்.

போரும் முடிந்தபாடில்லை.

ஏற்கெனவே இந்தியாவில் எல்.பி.ஜி தட்டுப்பாடு எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டது.

கச்சா எண்ணெய்

இந்தியா வந்த ‘கச்சா எண்ணெய்’ கப்பல்

இந்த நேரத்தில், நேற்று ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று மும்பை துறைமுகத்தை அடைந்திருக்கிறது.

அந்தக் கப்பலின் பெயர் ஷென்லாங். இது லைபீரியா கொடியிட்ட கப்பல் என்றாலும், அந்தக் கப்பலை ஓட்டி வந்தது என்னவோ இந்திய மாலுமி. அவர் பெயர் சுக்ஷாந்த் சிங் சந்து.

சவுதி அரேபியாவில் உள்ள ராஸ் தனுராவில் தொடங்கியிருக்கிறது இந்தக் கப்பலின் பயணம்.

இந்தக் கப்பல் கடந்த மார்ச் 3-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

போரினால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதை மீறி, அதன் வழியாக எந்தக் கப்பல் வந்தாலும் வீழ்த்தப்படும் என்று எச்சரித்துள்ளது ஈரான்.

இதனால், ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளின் குறியில் இருந்து தப்பிக்க இந்தியா வந்த கப்பல் டிரிக்ஸ் ஒன்றைப் பயன்படுத்தி உள்ளது.

AIS
AIS

AIS

பொதுவாக கப்பலில் ‘Automatic Identification System (AIS)’ என்கிற ஒன்று இருக்கும்.

இது கப்பலின் பாதுகாப்பிற்கும், கப்பலைக் கண்காணிப்பதற்கும் இருக்கும் சிஸ்டம் ஆகும்.

இதன் மூலம், தொடர்ந்து கப்பலைக் கண்காணிக்கலாம். எதிரில் என்ன கப்பல் வருகிறது, எங்கிருந்து வருகிறது, எங்கே செல்கிறது, அதன் வகை, எடை என்ன என்பதை எல்லாம் காட்டும்.

இதன் மூலம், ஒரு கப்பலை இன்னொரு கப்பல் இடிப்பது தடுக்கப்படுகிறது.

அடுத்ததாக, கப்பலுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதை எளிதாக இந்த சிஸ்டம் ‘கப்பல் எங்கு இருக்கிறது’ என்பதை கண்டுபிடிக்க முடியும்.

இது டிராபிக்குகளைக் குறைக்கவும் உதவும்.

‘ஸ்விட்ச் ஆஃப்’ டெக்னிக்

சவுதி அரேபியாவில் இருந்து கிளம்பிய கப்பல், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும்போது மட்டும் ஏ.ஐ.எஸ் சிஸ்டத்தை ‘ஆஃப்’ செய்திருக்கிறது.

இதனால், ஈரானால் இந்தக் கப்பலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

வெற்றிகரமாக அந்த ஜலசந்தியைக் கடந்த உடன் கப்பல் மீண்டும் ஏ.ஐ.எஸ் சிஸ்டத்தை ‘ஆன்’ செய்து பயணத்தைத் தொடங்கியிருக்கிறது.

இந்தக் கப்பலில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டினர் பயணித்திருக்கின்றனர். மொத்தம் 29 பேர்.

ஷென்லாங் கப்பல் 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றி வந்திருக்கிறது.

இந்தக் கச்சா எண்ணெயை தரையிறக்க கிட்டத்தட்ட 36 மணிநேரம் ஆகும்.

அதன் பின், மீண்டும் ஷென்லாங் ஐக்கிய அமீரக தூதரகத்திற்கு கிளம்ப உள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'அமெரிக்கா போனால் போகாட்டும்' NATO-விற்கு வேறு ஐடியா சொல்லும் ஜெலன்ஸ்கி; அதில் உக்ரைனுக்கு லாபம்

'நமக்கு வேண்டியபோது உதவவில்லை; இனியும் தேவை வந்தால் உதவமாட்டார்கள்' என்று ஈரான்...

“எடப்பாடி தொகுதிக்கு… விஜய் போட்ட புதிய ஸ்கெட்ச்” – விரைவில் அதிரடி அறிவிப்பு!

234 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய த.வெ.க கட்சி, எடப்பாடி தொகுதியில் போட்டியிட...

"அஸ்ஸாமில் வாக்களிக்க 50,000 பேர் உ.பி-யிலிருந்து வந்திருக்கின்றனர்" – மம்தா 'பகீர்' குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேசியத்...

வானதி சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அட்மிட் – காரணம் என்ன?

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, கோவை வடக்கு...