25
May, 2026

A News 365Times Venture

25
Monday
May, 2026

A News 365Times Venture

விழுப்புரம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 'வீர வசனம் என்ன ஆனது?'- முதல்வர் விஜய்க்கு டிடிவி கேள்வி

Date:

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிப்பாளையம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறுமி பாலியல் வன்கொடுமை

அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கும் சூழலில் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அமமுக செயலாளர் டிடிவி தினகரன் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ” குழந்தைகள் மற்றும் பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் வீரவசனம் என்ன ஆனது?

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிப்பாளையம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து துன்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது மரக்காணத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவம் தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வைக் கண்டு கொதித்தெழுந்து தங்கைகள் அனைவருக்கும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் எனக் கடிதம் எழுதிய ஜோசப் விஜய் அவர்கள், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அன்றாடம் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைக் கண்டும் காணாமல் வாய்மூடி மௌனம் காப்பது ஏன் ?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கைதான குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை பெற்று தருவதோடு, தனது ஆட்சியைப் பாதுகாப்பதில் செலுத்தும் கவனத்தைக் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு | 77-வது நாளில் தீர்ப்பு

தூத்துக்குடியில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலால்...

வெறும் 11 நாள்களில், பெட்ரோல், டீசல் விலை நான்கு முறை உயர்வு; கிட்டத்தட்ட ரூ.7 உயர்ந்தது!|Timeline

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் போர் தொடங்கியது. அன்றிலிருந்தே சர்வதேச...

"பின்வாசல் வழியாக பதவியில் ஒட்டிக்கொண்டீர்கள்" – மாணிக்கம் தாகூருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தூத்துக்குடியில் இன்று...

'நோ' கொத்துக் கொத்தாகப் பணம்; 'நோ' அணு ஆயுதத் தயாரிப்பு! – ட்ரம்ப் சொல்லும் ஒப்பந்தத்தின் Outline

'ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது' என்று நேற்று முன்தினம்...