23
June, 2026

A News 365Times Venture

23
Tuesday
June, 2026

A News 365Times Venture

"பாகிஸ்தானில் 'இந்த' அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்தியா மீது போர் தொடுப்போம்" – பாக்., எச்சரிக்கை

Date:

கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதலையொட்டி, இந்திய அரசு பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

சிந்து நதி நீர் என்பது பாகிஸ்தானுக்கு மிக மிக முக்கியம். இதை வைத்து தான் பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில் விவசாயம் செய்து வருகிறது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், பாகிஸ்தானுக்கு செல்லும் நீர் தடைப்பட்டிருக்கிறது. இதை நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானின் விவசாயமும், பொருளாதாரமும் தாங்கிக்கொள்ள முடியாது.

இதனால், பாகிஸ்தானில் இருந்து இப்போது குரல் எழுந்திருக்கிறது.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்

பாகிஸ்தான் என்ன சொல்கிறது?

பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேட்டி ஒன்றில், “எப்போது நமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறதோ – தண்ணீரும் நமது தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதிதான்.

அந்தக் கணமே நாம் இந்தியாவுக்கு எதிராகப் போருக்குச் செல்வோம். இது உறுதி.

இந்தியா நீரை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்தியாவின் நிலைப்பாடு

பாகிஸ்தான் தனது எல்லையைத் தாண்டிய பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழிப்பதற்கு நம்பகமான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் வரை இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்பதில் இந்திய அரசு தெளிவாக இருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கிய அதிருப்தி கோஷ்டி; உச்சகட்ட சிக்கலில் மம்தா!

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு,...

7 மாத குழந்தைக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை; 4 மணி நேரத்தில் சான்று வழங்கி உதவிய வட்டாட்சியர்!

தூத்துக்குடி மாவட்டம்,  எட்டயபுரம்  தாலுகாவிற்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 7 மாதக் கைக்குழந்தைக்கு...

“செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை!" – முதல்வர் விஜய் கதைக்கு உதயநிதி பதில் கதை

முதல்வர் விஜய் தலைமையிலான முதல் சட்டமன்றக் கூட்டத்தின் இறுதி நாள் கூட்டம்...

"நான் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டுவிட்டது" – முதல்வர் விஜய்

சட்டமன்றக் கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று (ஜூன்.23) நடைப்பெற்றது. கூட்டத்தொடரில்...