23
June, 2026

A News 365Times Venture

23
Tuesday
June, 2026

A News 365Times Venture

கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கிய அதிருப்தி கோஷ்டி; உச்சகட்ட சிக்கலில் மம்தா!

Date:

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு, அந்தக் கட்சி கடுமையான சவால்களைச் சந்தித்து வருகிறது. மம்தா பானர்ஜிக்கு எதிராக 60 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரிதப்ரதா பானர்ஜி என்பவரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்துள்ளனர். இது தவிர திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்கள் 20 பேர் தனியாகப் பிரிந்து சென்று பெயர் தெரியாத ஒரு கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

அவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி மம்தா பானர்ஜி தரப்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது 60 எம்.எல்.ஏ.க்களும் ஒன்று சேர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் விதமாக அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்கிவிட்டு புதிய தலைவரை நியமித்துள்ளனர்.

அரூப் ராய்

கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திரிணாமுல் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டினர். அதிருப்தி கோஷ்டியினர் கூட்டிய இக்கூட்டத்தில் கட்சியின் தற்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட சுமார் 500 திரிணாமுல் தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில், அதிருப்தியாளர்கள் 30 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய செயற்குழுவை அறிவித்தனர். அதோடு எம்.எல்.ஏ அரூப் ராய் என்பவரை கட்சியின் தலைவராக குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்தனர்.

துணைத் தலைவர்களாக ஃபிர்ஹாத் ஹக்கீம், அரூப் பிஸ்வாஸ், ரத்தின் கோஷ் மற்றும் சபீனா யாஸ்மின் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ரிதப்ரதா பானர்ஜி, ஜாவேத் கான் மற்றும் சந்தீபன் சாஹா ஆகியோர் பொதுச் செயலாளர்களாகவும், அக்ரூஸ்மான் அன்சாரி பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் ஒருமித்தக் கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ரிதப்பிரதா பானர்ஜி தெரிவித்தார்.

ரூ.440 கோடி முடக்கம்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.440 கோடி முடக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து பணம் முடக்கப்பட்டுள்ளது. பணம் எந்த வழியில் வந்தது என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 3 வங்கிகளில் கணக்கு இருக்கிறது. தற்போது ஏற்பட்டு இருக்கும் தலைமை பிரச்னைக்கு தீர்வு காணும் வரை பணத்தை யாரும் எடுக்கக் கூடாது என்று அதிருப்தி கோஷ்டி தெரிவித்துள்ளது. இதனால் மம்தா பானர்ஜிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசாணை வெளியிட்ட தமிழக அரசு – எப்போது தொடங்குகிறது?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும்...

7 மாத குழந்தைக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை; 4 மணி நேரத்தில் சான்று வழங்கி உதவிய வட்டாட்சியர்!

தூத்துக்குடி மாவட்டம்,  எட்டயபுரம்  தாலுகாவிற்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 7 மாதக் கைக்குழந்தைக்கு...

“செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை!" – முதல்வர் விஜய் கதைக்கு உதயநிதி பதில் கதை

முதல்வர் விஜய் தலைமையிலான முதல் சட்டமன்றக் கூட்டத்தின் இறுதி நாள் கூட்டம்...

"நான் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டுவிட்டது" – முதல்வர் விஜய்

சட்டமன்றக் கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று (ஜூன்.23) நடைப்பெற்றது. கூட்டத்தொடரில்...