24
June, 2026

A News 365Times Venture

24
Wednesday
June, 2026

A News 365Times Venture

“செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை!" – முதல்வர் விஜய் கதைக்கு உதயநிதி பதில் கதை

Date:

முதல்வர் விஜய் தலைமையிலான முதல் சட்டமன்றக் கூட்டத்தின் இறுதி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம், எதிக்கட்சிகளின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதிலளிப்பார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் உரையில் இறுதிப் பகுதியில், “எனக்கு ஒரு குட்டிக்கதை ஞாபகத்திற்கு வருகிறது. ” ஒரு ஊர்ல பெரியவர் ஒருத்தர் ரொம்ப வெயில் அடிக்குது’னு கண்ணுக்கு மேல கை வச்சு சுத்திக்கிட்டு இருந்தாராம். கூட இருந்த சின்ன பையன் என்ன வேண்டும், என்ன தேடிட்டு இருக்கிங்க’ன்னு கேட்டானாம். அது ஒன்னும் இல்ல தம்பி உங்க அப்பா இங்க இருக்காரு’ன்னு சொன்னாங்க அவரை தான் தேடிட்டு இருக்கேன். எங்க அவரை காணோம் அப்படின்னு கேட்ருக்காரு”

உதயநிதி ஸ்டாலின்

எங்களுக்கும் இந்த மாதிரி சம்பந்தம் இல்லாத கதையெல்லாம் பேச தெரியும். தப்பா எடுத்துகாதீங்க கதையில அந்த பெரியவர் அப்படி கேட்டிருக்கிறார். அதனால் யாரும் இங்கு டென்ஷன் ஆக வேண்டாம். பேசு பேசு என்கின்றனர். வெறும் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டுவிட்டது” என்று சட்டமன்றத்திற்குள்ளும் குட்டி ஸ்டோரி சொல்லி ஸ்டாலினை மறைமுகமாக சாடியிருக்கிறார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.

பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் – பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு – விவசாயிகள் பிரச்சினை – மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு – வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.

எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.

செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.

ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது தமிழ்நாட்டின் முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'விஜய் பிறந்தநாள் விழாவுக்காக 300 பேருந்துகளை காத்திருக்க வைப்பதா?'- அன்புமணி கண்டனம்

"விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்க விழாவுக்காக...

திருவானைக்காவல்: `டாஸ்மாக் கடையை மூடக் கூடாது' – போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்; என்ன நடந்தது?

திருச்சி, திருவானைக்காவல் அடுத்த அழகிரிபுரம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு...

ஈரானுக்கு கிடைக்கும் $12 பில்லியன்: 'உணவுக்கும், மருந்துக்கும் தான்' ட்ரம்ப் தகவல்; ஈரான் மறுப்பு!

போர் நிறுத்தத்தில் ஈரானுக்கு இருக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - ஈரானின்...

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன...