18
May, 2026

A News 365Times Venture

18
Monday
May, 2026

A News 365Times Venture

“திமுக கூட்டணிக் கட்சிகளின் காலில் விழுந்து…"- தவெக-வை கடுமையாக சாடும் எடப்பாடி பழனிசாமி!

Date:

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றாலும், ஆட்சி அமைக்கமுடியவில்லை. திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கும் தவெக-வுக்கு அதிமுக-வின் ஒரு பிரிவினர் ஆதரவுக் கரம் நீட்டினர். அதனால், அதிமுக இரண்டாக மீண்டும் பிளவுகண்டிருக்கிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அ.தி.மு.க-வின் முதுகில் குத்தி உள்ளது. பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், தி.மு.க-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், தி.மு.க ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன.

தவெக தலைவர் விஜய்

இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள். ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு பொய்க்கால் குதிரை அரசு அமைத்துவிட்டது.

நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான். கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அ.தி.மு.க செழித்து வளரும். அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும்.” எனக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கை….

அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“சமூக நீதி மண் என்று சொன்னாலும், அவ்வளவு எளிதாக ஒரு தலித் இங்கு முதல்வர் ஆகிவிட முடியாது”- திருமா

"பெரியார் மண் என்று சொன்னாலும் தமிழகத்தில் அவ்வளவு இலகுவாக தலித் முதல்வராக...

“இரட்டை கொலை; ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை; பொய்க்கால் குதிரை அரசே..!" – எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப்...

கோவை இருகூர் கொடூரம்: “பெற்றோரும், ஆசிரியர்களும் கவனிக்க வேண்டும்" – திமுக தலைவர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப்...

“எங்களுக்கும் பேச தெரியும்; அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும்..!" – மாணிக்கம் தாக்கூர்

திருச்செந்தூர் தொகுதி நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா...