18
May, 2026

A News 365Times Venture

18
Monday
May, 2026

A News 365Times Venture

“இரட்டை கொலை; ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை; பொய்க்கால் குதிரை அரசே..!" – எடப்பாடி பழனிசாமி

Date:

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “சென்னை முடிச்சூர், வரதராஜபுரத்தைச் சேர்ந்த பரத் மற்றும் சீனு என்ற கானா பாடகர்கள் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு படப்பையில், நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறுபேர் கும்பல் இருவரையும் கொடூர ஆயுதங்களால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

முதல்வர் ஜோசப் விஜய்

ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் இந்த காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல அமுமுக தலைவர் டிடிவி தினகரனும் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“திமுக கூட்டணிக் கட்சிகளின் காலில் விழுந்து…"- தவெக-வை கடுமையாக சாடும் எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றாலும், ஆட்சி அமைக்கமுடியவில்லை....

கோவை இருகூர் கொடூரம்: “பெற்றோரும், ஆசிரியர்களும் கவனிக்க வேண்டும்" – திமுக தலைவர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப்...

“எங்களுக்கும் பேச தெரியும்; அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும்..!" – மாணிக்கம் தாக்கூர்

திருச்செந்தூர் தொகுதி நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா...

மதுரை : 'ஆதார் அட்டையைக் காண்பித்து மது வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்' – காரணம் என்ன?

தமிழ்நாட்டில் கோயில்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீ சுற்றளவில் உள்ள...