14
June, 2026

A News 365Times Venture

14
Sunday
June, 2026

A News 365Times Venture

`தளபதி படம் பார்ப்பீங்களா?’ – அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்து ரீல்ஸ் போட்ட தவெக நிர்வாகி!

Date:

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன் தினம் பத்துக்கும் மேற்பட்ட தன்னுடைய ஆதரவாளர்களுடன் அந்தப் பள்ளிக்குச் சென்ற த.வெ.க-வின் காணை ஒன்றியச் செயலாளர் ஜான்பீட்டர், தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றார்.

அங்கிருந்த தலைமை ஆசிரியரிடம், `பள்ளிக்கூடம் எப்படி நடக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார். அதில் குழம்பிப் போன தலைமை ஆசிரியர், `நன்றாக நடக்கிறது’ என்று பதிலளித்தார்.

தொடர்ந்து, `இங்கு எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள்… எப்படி படிக்கிறார்கள்… ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா…’ என்று கல்வித்துறை அதிகாரிகளைப் போல கேள்வி எழுப்பினர் த.வெ.க நிர்வாகிகள்.

தலைமை ஆசிரியர் அறையில் தவெக நிர்வாகிகள்

அதற்கு அமைதியாக பதிலளித்த தலைமை ஆசிரியரிடம், `நடப்பது எங்கள் தளபதி ஆட்சி. பார்த்து நடந்துக்கங்க’ என்று கூறிவிட்டு, வகுப்பறைகளைப் பார்வையிட்டனர். அப்போது ஒரு வகுப்பறைக்குள் சென்ற அவர்கள், `நாங்கள் யார் தெரியுமா? உங்களுக்கு தளபதி விஜய்யை தெரியுமா? அவரின் படங்களைப் பார்ப்பீர்களா? இப்போது அவர்தான் முதலமைச்சர்.

நாங்கள் டி.வி.கே கட்சியில் இருந்து வர்றோம்’ என்று சொன்னதும் மாணவர்கள் ஆரவாரமாக விசிலடித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர்கள், `நடப்பது நம் தலைவர் தளபதியின் ஆட்சி.

அதனால்தான் ஆய்வு செய்ய வந்தோம்’ என்று கூறி மாணவர்களிடம் புத்தகங்களை வாங்கிப் பார்த்தனர். அதன் பிறகு அங்கிருந்து சென்ற அவர்கள், இந்த அனைத்து நிகழ்வுகளையும் ரீல்ஸ் வீடியோவாக தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர். இந்த விவகாரம் பெற்றோர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அண்ணாமலை வருகை நல்லது; தவெகவினர் அம்புகுறிகள்; விரைவில் நான்…" – ராகவா லாரன்ஸ் பேசியது என்ன?

"நான் அரசியலுக்கு வரணுமா ? வேண்டாமா ? என்பதை மக்களே முடிவு...

முதல்வர் பாணியில் ஆபீஸில் மதிய சாப்பாடு; பவானிசாகர் எம்எல்ஏ ரீல்ஸ்! எதிர்க்கட்சியினர் சொல்வதென்ன?

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் த.வெ.க வேட்பாளராகப் போட்டியிட்டவர் தமிழ்ச்செல்வி. தனக்கு...

புதுக்கோட்டை: கடன்கள், ஏறும் டீசல் விலை… 60 நாட்களுக்குப் பிறகு பாயக் காத்திருக்கும் படகுகள்

"ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் முடிஞ்சாச்சு. இனி எப்படியாவது கடலுக்குப் போய் நம்ம...

"தன் மகனை அரசியலுக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி டிராமா செய்கிறார்" – சி.வி.சண்முகம் தாக்கு

அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் இன்று (ஜூன்.14) செய்தியாளர்களைச் சந்தித்து...