ஒரு வாக்கால் ஒரு வாக்கு மிஸ் ஆகிறது
முன்னாள் திமுக அமைச்சர் பெரிய கருப்பன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோல்வியைத் தழுவினார்.
இந்தத் தேர்தல் முடிவை எதிர்த்து பெரிய கருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அதனால், தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாது.
விஜய்க்கு வேலுமணி தரப்பு ஆதரவு?
அதிமுக பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி அணி என்று இரண்டாக பிரிந்துள்ளது. இதில் எஸ்.பி.வேலுமணி அணி இன்று தவெகவிற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று தெரிய வருகிறது.
நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முதலமைச்சர் விஜய் வீட்டிற்கு வருகை தந்ததும், அங்கே எஸ்.பி.வேலுமணியை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
இன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூடுகிறது. தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ம் இன்று தான் நடைபெறுகிறது.
தவெக ஏற்கெனவே 107 தொகுதிகள் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை.
தவெகவின் கையில் தற்போது ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தொகுதிகளோடு மொத்தம் 120 தொகுதிகள் இருக்கின்றன. அதனால், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தவெகவிற்கு சாதகமாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து முழுவதும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ்நாட்டில் இன்னும் அரசியல் பரபரப்புகள் ஓயவில்லை. இன்றைய அரசியல் நிகழ்வுகளை இந்த Live Blog-ல் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.




