13
May, 2026

A News 365Times Venture

13
Wednesday
May, 2026

A News 365Times Venture

பதவியேற்பு விழாவில் கையெழுத்து போட மறுத்த முதல்வர் ரங்கசாமி! – 120 விநாடிகள் காத்திருந்தது ஏன்?

Date:

ஜோதிடர் குறித்துக் கொடுத்த `மேஜிக்’ டைம்..!

புதுச்சேரி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதியிலும், பா.ஜ.க 4 தொகுதியிலும், அ.தி.மு.க மற்றும் `லாட்டரி’ ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் ல.ஜ.க தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு, ஆட்சி அமைப்பதற்கு 16 தொகுதிகள் தேவை. அதன்படி 18 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள், சட்டமன்றக் குழு தலைவராக ரங்கசாமியை தேர்வு செய்தனர்.

முதல்வர் ரங்கசாமி

தொடர்ந்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி. குடியரசுத்தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்ததையைடுத்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர்.

ஆன்மிகம், ஆருடம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை உடையவரான ரங்கசாமி, பதவியேற்புக்காக தன்னுடைய ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரத்தை ஆளுநர் மாளிகைக்கு தெரிவித்தார். அதையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் (தற்போது லோக் நிவாஸ்) இன்று காலை 9.47 மணிக்கு ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வார் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

`நம்ம நேரம் வந்துடுச்சா..?’

காலை 9.33 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்தார் ரங்கசாமி. அதன் தொடர்ச்சியாக ஆளுநர் கைலாஷ்நாதனும் மேடைக்கு வந்தார். முதலில் வந்தே மாதரம், அதற்கடுத்து தேசிய கீதம், இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதையடுத்து முதல்வர் ரங்கசாமிக்கு பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமானமும் செய்து வைத்தார் ஆளுநர் கைலாஷ்நாதன்.

தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி கையெழுத்து போடுவதற்கான கோப்பு அங்கு வைக்கப்பட்டது. ஆனால் அதில் அவர் கையெழுத்துப் போடவில்லை. அதற்கு முன்பு தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியிடம், `நம்ம நேரம் வந்துடுச்சா…?’ என்று கேட்டார்.

நேரத்தை உறுதி செய்து கையெழுத்து போட்ட முதல்வர் ரங்கசாமி

அப்போது இல்லை என்று சொன்ன அந்த அதிகாரி, 9.45 நிமிடங்கள்தான் ஆகிறது என தன்னுடைய செல்போனை காட்டினார். அதையடுத்து அங்கிருந்த கோப்புகளை சரிபார்த்தவாறு, நேரத்தை கடத்தினார்.

அதன்பிறகு மீண்டும் தன் பாதுகாப்பு அதிகாரியின் செல்போனில் 9.47 என்று மாறியபிறகு கையெழுத்து போட்டார். அவரைத் தொடர்ந்து பா.ஜ.க சார்பில் நமச்சிவாயமும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் மல்லாடி கிருஷ்ணராவும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏக்கள் யார் யார் தெரியுமா? – சட்டமன்றத்தில் பிளவுப்பட்ட அதிமுக!

முதல்வர் விஜய்யின் தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்டிருந்தது....

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று 'நம்பிக்கை வாக்கெடுப்பு' – பெரும்பான்மையை நிரூபிப்பாரா விஜய்?|Live Updates

ஒரு வாக்கால் ஒரு வாக்கு மிஸ் ஆகிறதுமுன்னாள் திமுக அமைச்சர் பெரிய...

ஜோலார்பேட்டை: சிதிலமடைந்த `அம்மா’ பூங்கா… சமூகவிரோத கூடமாக மாறிய அவலம் – கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி...