13
May, 2026

A News 365Times Venture

13
Wednesday
May, 2026

A News 365Times Venture

ஜோலார்பேட்டை: சிதிலமடைந்த `அம்மா’ பூங்கா… சமூகவிரோத கூடமாக மாறிய அவலம் – கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

Date:

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி ஊராட்சியில், கடந்தகால அ.தி.மு.க ஆட்சியின்போது `அம்மா’ பூங்கா அமைக்கப்பட்டது. அந்தப் பகுதி மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், பொழுதுபோக்கவும் பூங்காவைப் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா பூங்காவைப் பராமரிக்காமல் விட்டுவிட்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ-வாக இருந்துவந்த க.தேவராஜியிடம் கவனப்படுத்தியும் அவர் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பூங்கா சிதிலமடைந்துபோனது. எங்குப் பார்த்தாலும் குப்பைகள் குவிந்துகிடக்கின்றன. சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் பூங்கா மாறியிருக்கிறது.

சமூகவிரோத கூடமாக மாறிய அவலம்

பூங்காவிற்குள் ஆங்காங்கே அமர்ந்துகொண்டு மது அருந்துவது, குடித்துவிட்டு காலி பாட்டில்களை அங்கேயே வீசிச் செல்வது என பூங்காவின் நிலை பதற வைத்திருக்கிறது. குழந்தைகளை அழைத்துசென்று விளையாட வைக்கவும் பெற்றோர் அச்சமடைகிறார்கள். போதை கும்பல்களின் நடமாட்டத்தால் பூங்காவைச் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளும் பீதியில் இருக்கிறார்கள்.

எனவே, `அம்மா பூங்காவை மீண்டும் புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்’ என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இது பற்றி, ஜோலார்பேட்டை பி.டி.ஓ ஹரியிடம் கேட்டபோது, `விரைவாக பூங்கா சீரமைக்கப்படும். காவல்துறை மூலம் கண்காணிக்கப்படும்’ என்று உறுதியளித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"எடப்பாடி நியமித்தவர் தான் கொறடா; அவர் உத்தரவை மீறினால் கட்சி தாவல்.!" – இன்பதுரை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து அதிமுக பிரிவாக செயல்பட்டு வருகிறது....

‘ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகும் உதயநிதி ஸ்டாலின் திருந்தவில்லை’ – வானதி சீனிவாசன் சாடல்

பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

`விஜய்யின் முதன்மை செயலாளரான ஆஸ்தான ஜோதிடர்' – ஊத்துக்குளி வெற்றிவேல், ரிக்கி ராதன் பண்டிட் ஆன கதை!

தமிழக முதல்வரின் சிறப்பு அரசியல் செயலாளர் என்கிற பதவிக்கு த.வெ.க-வின் செய்தி...

துரைமுருகனின் அறையில் ஆனந்த்; கே.என்.நேரு அறையில் அருண்ராஜ்! – தலைமைச் செயலக சுவாரஸ்யங்கள்!

தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்று 3 நாட்கள் ஆகிறது. திமுக,...