26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

"சோஃபா செட் இல்ல, லாக்கரே வந்தாலும்கூட தேமுதிக தன்னுடைய..!"- கூட்டணி மாறுவது குறித்து பிரேமலதா

Date:

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (ஆகஸ்ட். 25) கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

கூட்டத்தில் பேசிய அவர், “நமக்கு (தேமுதிக) என்ன அழைப்பு வரவில்லை என்று நினைக்கிறீர்களா? இன்றைய முதல்வர் அவர்களே அழைத்தார்.

ஆனாலும் நாம் ஒரு கொள்கை, ஒரு முடிவை எடுத்துவிட்டால் அந்தக் கொள்கையில் நிச்சயமாக உறுதியாக நிற்போம்.

விஜய் – பிரேமலதா விஜயகாந்த்

சோஃபா செட் இல்லை, பீரோ இல்லை, லாக்கரே வந்தாலும் கூட தேமுதிக தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறாது.

ஏனென்றால் கொள்கை முக்கியம். ஒரு கூட்டணியை வைத்து ஜெயிப்பார்கலாம், ஜெயித்த பிறகு தன்னுடைய சுயநலத்திற்காக இன்னொரு கட்சிக்கு சென்று விடுவார்களாம்.

அந்த நிலைப்பாடை தேமுதிக எப்போதும் எடுக்காது. கேப்டனுக்காவே வாழ்ந்து என் கண்முன்னாடி நிற்கும் வீரர்களே நீங்கள் தான் நாளைய வரலாறு.

எத்தனையோ எம்எல்ஏக்கள் தேமுதிகவை விட்டு சென்றார்கள். அரசியலில் வெற்றி வரும் தோல்வி வரும் அதையெல்லாம் கண்டு அஞ்சக்கூடிய கட்சி தேமுதிக இல்லை.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

எதற்கும் அஞ்சாமல் நாம் கொண்ட கொள்கையில் தலைவருடைய கனவு, லட்சியத்தை நாம் வென்று எடுத்து நிறைவேற்றுவோம். விருதாச்சலத்துக்கு என்னென்ன வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதோ அது நிறைவேற்றி தரப்படும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ரேஷன் அட்டையில் கைரேகை இன்னும் பதியவில்லையா? வருகிற சனிக்கிழமை சூப்பர் வாய்ப்பு!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா...

தேனி: ஆக்கிரமிப்பு பட்டியலில் பழங்குடி மக்கள்; நீதிமன்றத்தை ஏமாற்றியதாக வனத்துறை மீது குற்றச்சாட்டு?

மேகமலை வருஷநாடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த...

புதிதாக மின் இணைப்பு பெற, இனி வீட்டுக்கு அதிகாரிகள் வரமாட்டார்களா? – ஆகஸ்ட் 28 முதல் புதிய நடைமுறை!

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அனைத்துத் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுக்குச் சுற்றறிக்கை...

பரந்தூர் : வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான விவாதம்! தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா?

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் தொடக்கம்...