14
November, 2026

A News 365Times Venture

14
Saturday
November, 2026

A News 365Times Venture

“சட்டமன்றத் தேர்தலில் திமுக எங்களுக்கு எதிராக உள்ளடி வேலை செய்தது" – திருநாவுக்கரசு குற்றச்சாட்டு

Date:

காங்கிரஸ் கட்சி எவ்வாறு திமுக ஆட்சியைக் கவிழ்த்ததோ, அதேபோல தவெக அரசையும் கவிழ்த்துவிடும். எனவே, தவெக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பா.ஜ.க-வின் தமிழகப் பொறுப்பாளர் ராம் மாதவ் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜவஹர்லால் நேருவின் 138-ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சென்னை கத்திப்பாரா சந்திப்பில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி திருநாவுக்கரசு.

அப்போது, “ காங்கிரஸ் கட்சி எப்போது திமுக ஆட்சியைக் கவிழ்த்தது? ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணிகள் அமைப்பதும், கூட்டணிகளுக்குள்ளே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும், மாறி மாறி வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பதும் இயல்பான ஒன்று.

திருநாவுக்கரசு

இவையெல்லாம் இந்தத் தேர்தலில்தான் முதல் முறையாக நடக்கும் விஷயங்கள் அல்ல. அப்படிப் பார்த்தால், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திமுக, அதிலிருந்து விலகி நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லையா?

மேலும், பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் திமுக அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தார்களே, அதற்கு என்ன பெயர் சொல்வது? எனவே, இது போன்ற அரசியல் நகர்வுகளைத் ‘துரோகம்’ என்று அழைக்க முடியாது.

தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் தங்கள் நலனுக்கேற்ப இத்தகைய அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு எந்தவிதமான துரோகத்தையும் செய்யவில்லை. தேர்தல் நேரத்திலே நாங்கள் திமுகவுடன்தான் கூட்டணி அமைத்திருந்தோம்.

சொல்லப்போனால், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டணியை மாற்ற வேண்டும் என்றுதான் விரும்பினார்கள். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் இருந்ததெல்லாம் போதும், புதிய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்றுதான் தேர்தலுக்கு முன்பு தொண்டர்கள் நினைத்தார்கள்.

திருநாவுக்கரசு
திருநாவுக்கரசு

ஆனால், கட்சித் தலைமை வேறு விதமாகச் சிந்தித்தது. ராகுல் காந்தி தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எனச் சுமார் 40 பேரை டெல்லிக்கு அழைத்துக் கருத்துக் கேட்டார். அந்த 40 பேரில் பெரும்பான்மையானவர்கள், `திமுகவிற்கென்று ஒரு நிலையான வாக்கு வங்கி இருக்கிறது; அவர்களுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருக்கிறோம். எனவே, திமுகவுடனேயே தொடர்ந்து பயணிப்பதுதான் நல்லது’ என்று கருத்துத் தெரிவித்தனர்.

பெரும்பான்மையான காங்கிரஸ் தலைவர்களின் கருத்துக்களுக்கும், உட்கட்சி ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்தே ராகுல் காந்தி அவர்கள் திமுகவுடன் கூட்டணி அமைக்கச் சம்மதித்தார்.

இருப்பினும், கூட்டணிக்குள்ளேயே அங்கங்கே சில உள்ளடி வேலைகள் நடந்தன. சில தொகுதிகளில் திமுகவைச் சேர்ந்த அடிமட்டத் தொண்டர்கள் சிறப்பாகப் பணியாற்றினார்கள். அறந்தாங்கி தொகுதியில்கூட கலைஞரையும், ஸ்டாலின் அவர்களையும் விரும்பக்கூடிய, யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வுடன் செயல்படும் உண்மையான திமுக தொண்டர்கள் முழுமையாகத் தேர்தல் பணியாற்றினார்கள்.

அவர்களது உழைப்பினால்தான் அங்குப் போட்டியிட்ட ராமச்சந்திரனால் 60,000 வாக்குகளுக்கு மேல் பெற முடிந்தது.
திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால், முன்னாள் எம்.எல்.ஏ., முன்னாள் சேர்மன், ஒன்றியச் செயலாளர்கள் என அந்தப் பகுதியில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த சுமார் 10 முதல் 15 பேர், தங்களது சொந்த ஊரிலோ அல்லது சொந்த வாக்குச்சாவடியிலோகூட வாக்குகளைச் சேகரித்துத் தரவில்லை.

திருநாவுக்கரசு
திருநாவுக்கரசு

அங்கங்கே 500 வாக்குகள் குறைவாகப் பதிவாகும் வகையில், எதிர்க்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள். இத்தகைய உள்ளடி வேலைகளால்தான் அறந்தாங்கி போன்ற தொகுதிகளில் நாங்கள் தோல்வியைத் தழுவ நேரிட்டது.

இதுபோல பல இடங்களில் எங்களது தோல்விக்கு திமுகவில் இருந்த சில நிர்வாகிகளே காரணமாக இருந்தார்கள். ஆனால், இத்தகைய துரோக வேலையை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் செய்யவில்லை.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், அறந்தாங்கியில் ஏழெட்டு முக்கிய நிர்வாகிகள் எங்களுக்கு எதிராகச் செயல்பட்டதைப் போல, திருமயம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் மாற்றி வேலை பார்த்திருந்தால், அங்கு திமுகவால் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க முடியுமா?

அதேபோல, திருச்சியிலோ அல்லது புதுக்கோட்டையிலோ காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் உள்ளடி வேலை பார்த்திருந்தால், திமுக அங்கு 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மேகதாது விவகாரம்: “தமிழகத் தலைவர்களின் எதிர்ப்பைப் பற்றிக் கவலையில்லை" – கர்நாடக முதல்வர்

கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கர்நாடகா...

ஆபாச மெசேஜ்: "தவெக எம்எல்ஏ மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்" – அரசு ஊழியர் சங்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில்...

'சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதை தமிழ்நாடு அரசு நிறுத்தியதா?' – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

தமிழக அரசு மாதந்தோறும் வெளியிட்டு வரும் சுகாதாரத் தரவுகளில் இருக்கும் உண்மைகள்...

திருச்சி: 'அம்மன் ஆலயத்தில் ஆகம விதிமீறலா?' – புதிய கழிப்பறைக்கு ஆன்மிக ஆர்வலர் எதிர்ப்பு

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுமணி கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு...