15
November, 2026

A News 365Times Venture

15
Sunday
November, 2026

A News 365Times Venture

காவிரி: “ தண்ணீர் தர மாட்டேன் என்கிற கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க முடிகிறது?"- சீமான் காட்டம்

Date:

மைசூரில் நடந்த அரசு விழாவில் கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார் பிரதமர் மோடி முன்னிலையில், `காவிரி அணையை நீங்கள் இப்போதுதான் பார்த்தீர்கள். மேக்கேதாட்டு அணை கர்நாடகாவில் கட்டப்பட வேண்டும் என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. மத்திய அரசு எங்களுக்கு உதவ வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மேகதாது விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

குழந்தைகள் தினம்

அதற்குப் பதிலளித்த அவர், “அந்த முதல்வரின் உறுதியான முடிவு குறித்து இந்த மாநில முதல்வரிடம் கேள்வி கேளுங்கள். அதே காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இணைத்து ஆட்சி நடத்துவது யார்? தண்ணீர் தரவே மாட்டேன் என்கிற கட்சியுடன் உங்களால் எப்படி கூட்டு வைக்க முடிகிறது?

உரிமையைப் பறிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து இங்கு எதைக் காப்பாற்றப்போகிறீர்கள்? நியாயமாக யோசித்தால், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலம் இதுவா? அதுவா? அப்படியென்றால் அவர்கள் யாருடன் இருப்பார்கள்? எனவே, இதெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் நான் ஜீரோ…. ஹீரோவிடம் கேளுங்கள்.

எல்லாவற்றையும் செயலில் காட்டுவோம் என்கிறார்கள். காணாமல் போன ஒரு குழந்தையை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அரசின் நிலைபாடு என்ன?

மாவட்ட ஆட்சியர் பொய் சொல்கிறார்களா? மாபெரும் சட்டமன்றத்தை வழிநடத்தும் பொருப்பாளர் துணை சபாநாயகர் ஒருவரை எப்படி நடத்தினார் என்பதை ஊர் அறியும். ஆனால், இதுவரை அவரை இந்தப் பொறுப்புக்குத் தகுதியற்றவர் என பொறுப்பிலிருந்துகூட நீக்கவில்லை என்றால் இது என்னமாதிரியான தூய சக்தி?

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

பலரையும் தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகர் இவரை அருள் விக்னேஷை ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை? அந்தத் தொகுதியில் மீண்டும் தேர்தலில் மக்களைத் தைரியமாகச் சந்திக்க வேண்டியதுதானே? ஏன் பயம்? பெரும்பான்மை இல்லாமல் கலைஞர் ஆட்சி நடத்தினாரே? எனவே, நேர்மையும், உண்மையும்தான் இங்கு முக்கியமே தவிர பெரும்பான்மையல்ல.

குழந்தைகள் தின வாழ்த்து அட்டையில் நேரு மாமாவின் புகைப்படம் இல்லை என்றால் என்ன அதான் பொட்டுமாமாவின் புகைப்படம் இருக்கிறதே…. அதுபோதாதா?” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

வீடு புகுந்து திருடிய வழக்கு; கைதான குற்றவாளி மீது குண்டர் சட்டம்; கரூர் போலீஸ் அதிரடி

கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல் நிலைய...

மீண்டும் ஒரு காவல் மரணம்: “தவெக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது காவல்துறை" – டிடிவி தினகரன்

மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தேனி...

மேகதாது விவகாரம்: “தமிழகத் தலைவர்களின் எதிர்ப்பைப் பற்றிக் கவலையில்லை" – கர்நாடக முதல்வர்

கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கர்நாடகா...

“சட்டமன்றத் தேர்தலில் திமுக எங்களுக்கு எதிராக உள்ளடி வேலை செய்தது" – திருநாவுக்கரசு குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி எவ்வாறு திமுக ஆட்சியைக் கவிழ்த்ததோ, அதேபோல தவெக அரசையும்...