10
June, 2026

A News 365Times Venture

10
Wednesday
June, 2026

A News 365Times Venture

"ஏற்கனவே நிறைய அனுபவித்துவிட்டேன்" ராசியில்லை என ஒதுக்கிய 13-ம் நம்பர் காரை கேட்டு வாங்கிய அமைச்சர்!

Date:

எம்

கேரள மாநில முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்ற பின்னர் அமைச்சர்களின் இலாகாக்கள் ஒதுக்கீடு, அவர்களுக்கான பங்களா மற்ரும் கார் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த சி.பி.எம் அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக இருந்த பி. பிரசாத் 13 ஆம் எண் காரைப் பயன்படுத்தியிருந்தார். ஆனால், அதற்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 13-ம் எண் கார் ராசி இல்லை எனக்கூறி அமைச்சர்கள் யாரும் அந்த காரை பயன்படுத்தாமல் புறக்கணித்தனர். அதுபோன்றே இந்த முறை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததும் 13-ம் நம்பர் காரை ஏற்றுக்கொள்ள அமைச்சர்கள் யாரும் முன்வராமல் இருந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.எம்.ஷாஜி 13-ம் நம்பர் காரை கேட்டுப்பெற்றுக்கொண்டார். இதுபற்றி கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.எம்.ஷாஜி கூறுகையில், “13-ம் எண் காரை பயன்படுத்தினால் கஷ்டங்கள் வரும் என்று கூறப்படும் மூடநம்பிக்கைகளில் தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.13-ம் நம்பர் சாதாரண எண். யாருக்கும் அந்த எண் வேண்டாம் என்று காரை பெற்றுக்கொள்ளாமல் இருந்தார்களா என்று எனக்குத் தெரியாது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 13-ம் எண் காரை பயன்படுத்தாமல் இருந்தார்களா எனவும் எனக்கு தெரியாது. ஆனால், அதற்காக அந்த எண்ணை மோசமான ஒன்றாக ஒதுக்கக் கூடாது அல்லவா? அதனால் நான் அதை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினேன்.

கே.எம்.ஷாஜி

இப்போது தற்காலிகமாக எனக்கு 9 ஆம் எண் கார் ஒதுக்கப்பட்டுள்ளது. 9-ம் எண்ணாக இருந்தாலும் 13-ம் எண்ணாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். 13-ம் எண்ணை எடுத்தால் ஏதாவது கஷ்டங்கள் வரும் என்றுதானே நினைக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் எல்லாம் ஏற்கனவே முடிந்துவிட்டன. இனி வருவதற்கு கஷ்டங்கள் ஒன்றும் இல்லை. நான் ஏற்கனவே நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டேன். அப்போதெல்லாம் என் கையில் 13-ம் எண் இல்லையே. நான் இரண்டு முறை தேர்தலில் தோற்றபோதும் என்னிடம் 13-ம் எண் இருக்கவில்லை. இதுபோன்ற விஷயங்களில் எனக்குப் பொதுவாகவே நம்பிக்கை கிடையாது.

கேரள அமைச்சர் கே.எம்.ஷாஜி

அந்த எண்ணுள்ள காரில் சென்றாலும், செல்லாமல் இருந்தாலும் விபத்துகள் நடக்கலாம். அப்படி ஏதேனும் விபத்து நடந்தால், சிலர் ’13 ஆம் எண் காரை எடுத்ததால் தான் இப்படி நடந்தது’ என்று கூறுவார்கள். ஆனால், அதில் எனக்கு எந்த அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஏதோ பெரிய புரட்சியாளனாகக் காட்டிக் கொள்வதற்காக நான் இந்த எண்ணைத் தேர்ந்தெடுக்கவில்லை” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரை வீழ்த்திய ஈரான்; 'தற்காப்புத் தாக்குதல்' நடத்திய அமெரிக்கா

ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா. நேற்று ஈரான், அமெரிக்க ராணுவத்தின்...

'அரசை விமர்சித்த டிவி சானல்கள் அரசு கேபிளில் முடக்கமா?' – எதிர்க்கட்சிகள் கண்டனம்; ராஜ்மோகன் பதில்

தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ்...

3 செய்தி தொலைக்காட்சிகள் அரசு கேபிளில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்: அரசு விளக்கம்

செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் ...

'வெளிச்சம் டிவியை கட்டியெழுப்பியது யார்?' – சீண்டிக்கொள்ளும் சிறுத்தைகள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ...