8
August, 2026

A News 365Times Venture

8
Saturday
August, 2026

A News 365Times Venture

`அறிவுள்ளவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?' – மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் அமைச்சர் பி.டி.ஆர் காட்டம்

Date:

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாமை நடத்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தோல்வி அடைந்த மும்மொழிக் கொள்கை மாடலை தமிழ்நாட்டில் திணிக்க பாஜக முயற்சிக்கிறது. வெற்றி அடைந்த நம்முடைய மாடலை எடுத்துவிட்டு நான் சொல்கிற தோல்வியுற்ற மாடலை பின்பற்று என்று சொன்னால் என்ன அர்த்தம்? அறிவுள்ளவர்கள் யாராவது இதனை ஏற்றுக்கொள்வார்களா?

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

சுயமரியாதை எல்லாம் இரண்டாவது, முதலில் அறிவு இருப்பவர்கள் யாராவது இதனை ஏற்றுக்கொள்வார்களா.? மும்மொழிக் கொள்கை முதன் முதலில் 1968 -ஆம் ஆண்டு சட்டமாக அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை மும்மொழிக் கொள்கை என்று சொல்லி வருகிறார்கள். 57 வருடங்கள் ஆகியும் மும்மொழிக் கொள்கையை எங்குமே முழுமையாக அமல்படுத்த முடியவில்லை.

யாரெல்லாம் தமிழ்நாட்டைப்போல இருமொழிக் கொள்கையை பின்பற்றுகிறார்களோ அங்கு தேசிய சராசரியை விட சிறப்பான நிலையை அடைந்துள்ளது. நமக்குத் தமிழ், உலகிற்கு ஆங்கிலம் என்றார் அண்ணா.

குறை தீர்க்கும் முகாமில்

உத்தரப்பிரதேசத்திலோ, பீகாரிலோ, மத்தியப் பிரதேசத்திலோ இருமொழிக் கொள்கையை அமல்படுத்தி இருந்திருந்தாலே நமக்கு 3-வது மொழியே தேவைப்படாது. இரண்டாவது மொழியை ஒழுங்காக கற்றுக் கொடுத்திருந்தாலே ஆங்கிலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

மொழியை திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது. இரண்டாவது மொழியையே சிறப்பாக கற்றுத்தர முடியாதவர்கள், மூன்றாவது மொழியை படிக்கச் சொன்னால் அதனை ஏற்க முடியுமா.? இதை எல்.கே.ஜி படிப்பவர்கள் முனைவர் பட்டம் படிப்பவர்களிடம் வந்து இப்படிப் படியுங்கள் எனச் சொல்வதுபோல உள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்” என்றவர்…

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

தொடர்ந்து பேசும்போது, “ஒரு ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தின் முக்கிய கடமை மக்களின் குறைகளை கண்டறிந்து தீர்ப்பது. அதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மாமன்ற உறுப்பினரும் அலுவலகம் மூலம் மக்களின் கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல் ஆன்லைன், வாட்ஸ்அப் மூலமும் மக்களின் கோரிக்கைகளை புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கிறோம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

2021 – 2026: பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள்! எவ்வளவு செலவு தெரியுமா?

2021 முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசு கருவூலத்திலிருந்து குறைந்தது...

அமெரிக்கவிடம் குறைந்த ஆயுதங்கள்! பீட் ஹெக்செத்தை சாடிய ட்ரம்ப்? ட்ரம்ப் ஏன் பின்வாங்குகிறார்?

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் முடிந்துவிட்டது. ஈரானும் சரி......

மயிலாடுதுறை சந்திப்பு: புது கழிவறைக்கு பூட்டு; பழைய கழிப்பறையால் போக்குவரத்து நெரிசல்; மக்கள் சிரமம்

மயிலாடுதுறை ரயில் சந்திப்பானது மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் நெடுந்தூரப் போக்குவரத்திற்கு...

"அதை உங்க அப்பாவிடம்தான் கேட்கணும், அவரை இங்க காணோம்..!"- ஆதவ் அர்ஜுனா Vs உதயநிதி

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இதில்...