29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

'அது போதைப்பொருள் இல்லங்க; குழந்தையோட மாத்திரை!' – விளக்கும் தவெக அமைச்சர் சரத்!

Date:

தவெக அரசின் மனிதவளத்துறை அமைச்சரான சரத் போதைப் பொருள் பயன்படுத்துவதை போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில், இப்போது அமைச்சர் சரத் அந்த வீடியோ குறித்த விளக்கத்தை கூறியிருக்கிறார்.

பரவும் வீடியோவில்

மனிதவளத்துறை அமைச்சர் சரத் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே தன்னுடைய போனின் திரையில் வைத்து போதைப்பொருள் ஒன்றை பொடியாக்கிக் கொண்டிருப்பதை போல வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

போதைப் பொருள்களுக்கு எதிரான மாரத்தான் ஓட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்ட நிலையில், அமைச்சர் சரத்தின் வீடியோ இணையத்தில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில், அமைச்சர் சரத் இப்போது அந்த வீடியோ குறித்து விளக்கியிருக்கிறார்.

விளக்க வீடியோ
விளக்க வீடியோ

‘அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் மைதானத்தில் எடுக்கப்பட்ட வீடியோ. என் குழந்தைக்கு அப்போது ஒன்றரை வயது. உடம்பு சரியில்லை. குழந்தையின் மாத்திரையை பொடியாக்கி தண்ணீரில் கலந்து கொடுக்கவே அப்படி செய்தேன். கிரிக்கெட் மைதானத்தில் அத்தனை பேருக்கு முன்பாக அத்தனை கேமராக்களுக்கு முன்பாக எப்படி போதைப் பொருளை பயன்படுத்த முடியும்? அந்த வீடியோவை வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கிறார்கள்’ எனக் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தொண்டை சரியில்ல' – ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு அமைச்சரின் பதில்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது த.வெ.க சார்பில் மகளிருக்கு மாதந்தோறும்...

MLA பதவியை ராஜினாமா செய்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சி.விஜயபாஸ்கருடன் தவெகவில் இணைகிறார்!| Exclusive

அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது...

மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை? யாருக்கு வாய்ப்பு? யார் வெளியேற்றம்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிக விரைவில் முக்கிய...

மனமகிழ் மன்றங்களுக்கு ரூ.30 லட்சம் வரை சிறப்புக் கட்டணம்; தமிழ்நாடு அரசின் புதிய கட்டண விவரம்

தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு...