26
June, 2026

A News 365Times Venture

26
Friday
June, 2026

A News 365Times Venture

'பராமரிப்பு பணி' ஜூலை 1-ம் தேதி வரை, ஆன்லைனில் PF கிளெய்ம் செய்ய முடியாது!

Date:

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர் வலைதளம், நிறுவனங்களின் வலைதளம், UMANG ஆப் ஆகியவை ஐந்து நாள்களுக்கு தற்காலிகமாக வேலை செய்யாது என்று EPFO அறிவித்துள்ளது.

என்ன காரணம்?

கணினி மேம்பாட்டுப் பணி காரணமாக இந்த வலைதளங்கள் மற்றும் ஆப் தற்காலிகமாக வேலை செய்யாது.

எப்போது முதல் எப்போது வரை?

இன்று (ஜூன் 26, 2026) முதல் வருகிற ஜூன் 30, 2026 வரை மேம்பாட்டுப் பணிகள் நடக்க உள்ளது.

அதன் பின், வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் வழக்கம் போல் EPFO வலைதளங்களிலும், UMANG ஆப்பும் செயல்படும்.

EPFO

இந்த 5 நாள்களில் என்னென்ன சேவைகளை செய்ய முடியாது?

> கிளெய்ம் சமர்ப்பித்தல் மற்றும் பரிசீலனை

> ECR தாக்கல்

> புதிய ஊழியர்களுக்கு UAN இணைத்தல்

> e-பாஸ்புக் சேவைகள்

ஏன் இந்த மேம்பாட்டுப் பணி?

வலைதளங்களும், ஆப்களும் வேகமாகவும், நம்பகத்தன்மையுடனும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கு இந்த மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தச் சமயத்தில் முக்கியமான அல்லது அவசரமான பணியாளர் வருங்கால வைப்பு நிதி பணி ஏதேனும் இருந்தால் 14470 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'CM சும்மா 50மீ ஓடுவாருன்னு நினைச்சோம்.!' – முதல்வருடன் மாரத்தானில் ஓடிய வீராங்கனைகள் நெகிழ்ச்சி!

'ஸ்டார்ட் ரன் ஸ்டாப் ட்ரக்ஸ்' என்ற பெயரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு...

'அது போதைப்பொருள் இல்லங்க; குழந்தையோட மாத்திரை!' – விளக்கும் தவெக அமைச்சர் சரத்!

தவெக அரசின் மனிதவளத்துறை அமைச்சரான சரத் போதைப் பொருள் பயன்படுத்துவதை போன்ற...

`கன்ஃபெஷன் ரூம் டு கன்சல்டன்ட் ரூம்' – அறிவாலயத்தில் பிக்பாஸ் சாஷோ?!

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் அதிரி புதிரி அரசியலுக்குத் திமுக...

“திமுக-வை பாஜக பக்கம் இழுத்துச் செல்கிறார் ஆ.ராசா’’ – அமைச்சர் வன்னி அரசு சூசகம்!

ராணிப்பேட்டையில் இன்று, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்....