29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

ஆய்வுக்குப் போன இடத்தில் அரசு வாகனத்தில் ரீல்ஸ்; சர்ச்சையில் சத்தியமங்கலம் தாசில்தார்

Date:

ஈரோடு மாவட்டத்தில் அரசு அதிகாரிகளில் ஒரு சிலர் வரம்புகளை மீறி பணி நேரங்களில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுப்பதும் அதனை சோசியல் மீடியாக்களிலும் பகிர்வதும் அண்மைக்காலமாகத் தொடர்ந்து வருகின்றன.

அந்த வரிசையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தின் வட்டாட்சியர் ஜமுனா ராணி, அண்மையில் ஆய்வு பணிகளுக்காக கடம்பூர் மலைப்பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

தாசில்தாருக்கான அரசு வாகனத்தில் சென்ற அவர், நடுவழியில் சாலையில் வாகனத்தை நிறுத்தி கடம்பூர் மலை அழகைக் கண்டு ரசித்திருக்கிறார். அதோடு நிற்காமல் ‘ஜவ்வாது பெண்ணானது’ என்கிற சினிமா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து அதை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டிருக்கிறார்.

வட்டாட்சியர் ஜமுனா ராணி

‘மாவட்டத்தில் ஆட்சியருக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய வட்டாட்சியர் ஒருவர் பணி நேரத்தில் வரம்புகளை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதவாறு உயர் அதிகாரிகள் முறையாக நெறிமுறைப்படுத்த வேண்டும்’ எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

‘அரசு எவ்வழியோ அதிகாரிகளும் அவ்வழியே’ என கமெண்ட்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் ‌.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மனமகிழ் மன்றங்களுக்கு ரூ.30 லட்சம் வரை சிறப்புக் கட்டணம்; தமிழ்நாடு அரசின் புதிய கட்டண விவரம்

தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு...

ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய எஸ்.பி. வேலுமணி; அதிமுக-வில் இருந்து வெளியேற திட்டமா?

அ.தி.மு.க-வில் மீண்டும் இணைந்தாலும் பழைய பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள முன்னாள்...

Vijay: குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்த முதல்வர் விஜய் | Photo Album

CM Vijay : 'தவெக அரசின் விஜய்யிஸ அரசியல்.!' - ஓர்...

மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது ஏன்? – கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் விளக்கம்

மதிமுக பொதுக்குழுக்கூட்டம் நேற்று (ஜூன்.27) நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாகத்...