28
June, 2026

A News 365Times Venture

28
Sunday
June, 2026

A News 365Times Venture

டெல்லி சிறப்புப் பிரதிநிதி: “முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' – சிபிஐ வீரபாண்டியன்

Date:

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், சிபிஐ கட்சியும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, கர்நாடக அரசியல் செல்வாக்குடன், பெங்களூருவை மையமாகக் கொண்டு தொழில் நடத்தி வரும் வெங்கட் கே. நாராயணா நியமனம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் – கே.வெங்கட நாராயணா

இந்த நியமனம் தமிழ்நாட்டில் வாதப்பிரதிவாதத்தை உருவாக்கி, கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைகள் பற்றிய புரிதலிலும், கலை, இலக்கியம், பண்பாட்டு துறைகளிலும் போதிய புரிந்து கொள்ளல் இல்லாத ஒருவர், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, அவரது நியமனத்தை மறுபரிசீலனை செய்து, பொருத்தமான பிரதிநிதியை நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Vijay: குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்த முதல்வர் விஜய் | Photo Album

CM Vijay : 'தவெக அரசின் விஜய்யிஸ அரசியல்.!' - ஓர்...

மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது ஏன்? – கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் விளக்கம்

மதிமுக பொதுக்குழுக்கூட்டம் நேற்று (ஜூன்.27) நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாகத்...

'மக்களின் இந்த பொறுப்புணர்வு.!' பெட்ரோல் சிக்கனம், தங்கம் தவிர்ப்பு ஒத்துழைப்புக்கு பிரதமர் நன்றி

மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் காரணமாக, உலக அளவில் பெட்ரோல்,...

`மதிமுக MLA-க்களை விஜய் ராஜினாமா செய்ய சொல்கிறாரா?' – திருமாவளவனின் பதில் என்ன?

விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச்...