31
August, 2026

A News 365Times Venture

31
Monday
August, 2026

A News 365Times Venture

நேபாள வெள்ளம்: உடல்களை அடக்கம் செய்கிறார்கள்; ஆனால் DNA-வை ஏன் சேமிக்கிறார்கள்?

Date:

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மீட்புப் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இதுவரை கிட்டத்தட்ட 675 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 3,000-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை.

சேறு மற்றும் இடிபாடுகளுக்குக் கீழே, அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேபாள வெள்ளம்

தொற்றுநோய் பிரச்னை

இதுவரை மீட்கப்பட்டுள்ள உடல்களில் 233 சித்வான் மாவட்டத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் பல உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

ஆனால், உடல்களைத் தொடர்ந்து வைத்திருக்க சித்வான் மாவட்ட மருத்துவமனைகளில் போதுமான வசதி மற்றும் இடம் இல்லை.

அந்த உடல்களை அப்படியே வைத்திருந்தால், உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கும். மேலும், இந்த உடல்கள் மூலம் தொற்றுநோய்கள் பரவலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதனால், நேபாள அரசாங்கம் அந்த உடல்களைப் புதைத்து வருகிறது.

சிக்கலைத் தடுக்க…

உடல்களை அடையாளம் காணாமல் புதைப்பதால், இறந்தவர்கள் யார் என்று தெரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படலாம்.

இதைத் தடுக்க, அதிகாரிகள் உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பு அவற்றிலிருந்து டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிக்கின்றனர்.

எதிர்காலத்தில் அடையாளம் காண்பதை எளிதாக்கும் வகையில், அவர்கள் அடையாள அல்லது குறிப்பு எண்களைப் பயன்படுத்திப் பதிவுகளையும் பராமரிக்கின்றனர்.

ஒவ்வொரு உடலுக்கும் அதன் இருப்பிடக் குறியீட்டுடன் ஒரு தனித்துவமான அடையாள எண் உள்ளது.

இதன் மூலம் டி.என்.ஏ பொருந்தும்போது, உறவினர்கள் அந்த உடலைத் தோண்டி எடுத்துக்கொள்ள முடியும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கார்க்கேவுக்கு எதிரான சாதிய அவமதிப்பு; கண்டித்த ராகுல் மீது வழக்கு; பாஜகவைச் சாடும் செல்வப்பெருந்தகை

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு இழைக்கப்பட்ட சாதிய...

Nepal Floods: தமிழர்களை மீட்க காட்மண்டுவில் தமிழக அதிகாரிகள்! – அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் கிட்டதட்ட 900 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும்...

`தாய் வழியில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்!’ – அதிரடி காட்டிய நீதிமன்றம்; அசராத புதுச்சேரி அரசு

புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு வெளிமாநில ஆண்களை திருமணம் செய்யும் பெண்களின் குழந்தைகளுக்கு,...

'பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு' – தவெக-க்கு காங்கிரஸ் மீண்டும் பதிலடி

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பிரதம வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் த.வெ.க...