31
August, 2026

A News 365Times Venture

31
Monday
August, 2026

A News 365Times Venture

'பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு' – தவெக-க்கு காங்கிரஸ் மீண்டும் பதிலடி

Date:

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பிரதம வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் த.வெ.க இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைவர் ராகுல் காந்தியை 2029 இல் பிரதமராக ஏற்காவிட்டால் தமிழகத்தில் த.வெ.க அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜேஷ் குமார் கருத்தினை வரவேற்கிறேன்.

கடந்த 30 ஆண்டுகளாக பாஜக அரசை எதிர்த்து மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பவர் ராகுல் காந்தி அவர்கள் மட்டுமே.

கணபதி சிவக்குமார்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலையையும் முடிவுகளையும் வைத்துக்கொண்டு வலுவாக வேர்விட்ட அரசியல் கட்சியாக த.வெ.க உருவாகி விட்டதாக போலியாக நினைத்து தமிழக அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேர் கொண்ட மரங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் துளிர்க்கலாம். பூக்கலாம். எந்த இயற்கை சீற்றத்தையும் தாங்கும் சக்தியும் வேர்கொண்ட மரங்களுக்கு உண்டு .

ஆனால் த.வெ.க இப்பொழுது தான் முளைக்கத் தொடங்கியுள்ள செடி. வேர் விட்டு வளரும் வரை பொறுமை காக்க வேண்டும். தமிழக கள அரசியலை புரிந்து கொண்டு மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து இயக்கம் வளர்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதை விடுத்து இன்னமும் பூரண மெஜாரிட்டி இல்லாத சூழலில் இல்லாத ஊருக்கு வழி தேடுவது த.வெ.க-வின் எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TN Assembly : `110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்த 6 அறிவிப்புகள்!' – முழு விவரம்!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே முதல்வர்...

'ஹார்முஸில் கண்ணிவெடிகள்' – ஈரானை அமெரிக்கா தாக்கியது ஏன்? ஈரானின் பதிலடி என்ன?

கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தான், அமெரிக்கா, ஈரான் மீது ‘ஆபரேஷன்...

"அது தவெக-வின் விருப்பம்; ஆனால் மக்களுக்கான ஆட்சியை ராகுல் காந்திதான் தர முடியும்" – விஜய் வசந்த் MP

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஈராச்சி கிராமத்திலுள்ள பரிமேழலகர் இந்து நடுநிலைப்பள்ளியின்...