13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

"சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பது ஏன்?" – தவெக அரசுக்கு கனிமொழி கேள்வி

Date:

தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கொலைகள், பாலியல் குற்றங்கள் என அடுத்தடுத்து குற்றசம்பவங்கள் அரங்கேறி கொண்டே இருக்கின்றன.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் 25 வயது பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்.

க்ரைம்

அதேபோல தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தக் குற்றசம்பவங்களுக்கு திமுக-வைச் சேர்ந்த தூத்துக்குடி எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “கடலூரில் இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செய்தி, தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி என தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வேதனை அளிக்கும் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தவெக அரசு
தவெக அரசு

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளின் தீவிரத்தை உணர்ந்து எப்போது செயல்படப் போகிறது, தவெக அரசு?

மகளிர் பாதுகாப்புக்காக இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த ‘சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? தொடரும் இந்தக் குற்றச் சம்பங்களைத் தடுக்க என்ன செய்யப்போகிறது, இந்த அரசு?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"GDP-யில் 17% உழைப்பு இல்லத்தரசிகளுடையது; அவர்களின் உத்தேச வருமானம் ரூ.30,000" – உச்ச நீதிமன்றம்

இல்லத்தரசிகள் அல்லது குடும்பத் தலைவிகள் என்பவர்கள் வெறும் வீட்டைப் பராமரிப்பவர்கள் மட்டுமல்ல,...

கவின் ஆணவப் படுகொலை: கொலையாளி சுர்ஜித்தின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்!

நெல்லையில் ஐடி பொறியாளர் கவின் கடந்த வருடம் ஆணவக் கொலை செய்யப்பட்டது...

Vijay: "கர்நாடகம் சென்ற விஜய் காவிரி நீரைக் கொண்டு வருவாரா?" – தவெக அரசுக்கு திமுக கேள்வி

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுப்படிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர்...

நிதி ஆயோக் கூட்டம்: "திமுக-வின் சாதனைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல்" – உதயநிதி சாடல்

நிதி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகள் மீது முழுக்க முழுக்க...