12
June, 2026

A News 365Times Venture

12
Friday
June, 2026

A News 365Times Venture

நிதி ஆயோக் கூட்டம்: "திமுக-வின் சாதனைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல்" – உதயநிதி சாடல்

Date:

நிதி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகள் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல் அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.

முதல்வர் விஜய் – பிரதமர் மோடி

இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது – இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் – பெண் கல்வி – பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.

இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு ‘நீட் மட்டும்தான் உலகமா?’ என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.

டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக் கட்சியிடமோ மேகதாது பிரச்னை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்

மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!

பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி – மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Vijay: "கர்நாடகம் சென்ற விஜய் காவிரி நீரைக் கொண்டு வருவாரா?" – தவெக அரசுக்கு திமுக கேள்வி

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுப்படிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர்...

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார்....

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' – சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்...

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது...