26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

`உசுர கையில பிடிச்சிட்டு ரோட்டைக் கடக்குறோம்'- குடிநீர் பிரச்னையால் சிரமப்படும் சிக்கனம்பட்டி மக்கள்

Date:

சேலம், காடையாம்பட்டி தாலுகா சிக்கனம்பட்டி ஊராட்சியில் சாலையின் ஒருபக்கம் 100 குடும்பங்களும், இன்னொரு பக்கம் ரோஜா நகரில் 20 குடும்பங்களும் உள்ளன.

இந்த 100 குடும்பங்களுகிறது. ரோஜா நகரில் உள்ள குடும்பங்களுக்கு பைப் லைன் போடவில்லை. இதனால் இந்த 20 குடும்பங்கள் சாலையைக் கடந்து வந்துதான் மறுபுறம் உள்ள ஊரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சாலையைக் கடந்து செல்கிறார்கள்.

இந்தப் பிரச்னை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து நிலவி வருகிறது. அதுவும் மாதம் இருமுறை மட்டும் குடிநீர் கிடைக்கும் மோசமான நிலையில் தற்போது இருக்கிறார்கள். இந்த நெடுஞ்சாலையைக் கடக்கும் போது பல முறை நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார்கள். இதில் அதிகமாக பெண்களே சாலையைக் கடக்கிறார்கள்.

2023-2024, 14 – வது மத்திய நிதிக் குழு மானியத்தில் சேலம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி குடிநீர் வசதிக்காக ஆழ்துளைக் கிணறு ஒன்று வெட்டி அதில் இருந்து பைப் லைன் கொடுத்து தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. அதுவும் அதிகாரிகள் பார்வைக்காக அப்பொழுது மட்டும் வந்தது, பிறகு அதில் தண்ணீர் வந்தே பல மாதங்கள் ஆகிறது. பிறகு அதுவும் பழுதடைந்து விட்டது.

அதை சரி செய்யக்கூட யாரும் முன்வரவில்லை. பல வருடமாக இப்படியே சாலையைக் கடந்து சென்று வருகிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய ரோஜா நகர் பெண்கள், “நாங்கள் 10 வருடமாக இந்த நிலைமையில் தான் இருக்கிறோம். ஊர் தலைவரிடம் போய் கேட்டதற்கு இங்கு பாலம் பணிகள் நடைபெறும், அதற்குப் பிறகு பைப் லைன் போட்டு தரலாம் என்று சொன்னார்.

பக்கத்துல இருக்க ஊருக்கும் எங்க நிலைமைதான். ஆனால் அவங்களுக்கு பாலத்துக்கு அடியில குடிதண்ணீருக்கு வசதி செய்து குடுத்துருக்காங்க. ஆனா எங்களை தான் மறந்துட்டாங்க. இன்னும் எவ்ளோ நாளைக்கு நாங்க இந்த கஷ்டத்தை அனுபவிக்கனும். ஒரு திட்டத்தில் வீட்டிற்கு பைப் லைன் போன வருடம் கவுன்சிலர் போட்டுக்கொடுத்தார். ஆனா அதுல தண்ணியவே பார்க்கமுடியால. நாங்களும் பலமுறை போய் கேட்போம். அவங்களும் ஏதாவது காரணம் சொல்லி தப்பித்துவிடுவார்கள்.

மீண்டும் ஊர் தலைவரிடம் போய் பேசியதற்கு இன்னும் கொஞ்சநாளில் BDO மாறிவிடுவார்கள், அப்பொழுது அவரிடம் பேசி இந்த பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார். நாங்க பிள்ள குட்டிய வெச்சிக்கிட்டு இப்படி பயத்த காட்டிக்காம ரோட்ட தாண்டி போய் தண்ணி எடுத்து வந்துட்டு இருக்கோம். சீக்கிரம் இதுக்கு ஒரு விடிவு காலம் வேண்டும் என்று ரோஜா நகர் சார்பாக அரசை கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.

இது தொடர்பாக ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசியபோது, “நான் தொகுதி மேம்பாட்டு அதிகாரியுடன் நேரில் சென்று இடத்தைப் பார்க்கிறேன், மக்களிடம் பேசுகிறேன். கண்டிப்பாக விரைவில் இந்தப் பிரச்னையை சரி செய்கிறேன்” என்று கூறினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பரந்தூர்: "நிலத்தைத் திரும்ப ஒப்படைப்பதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும்.!"- பூவுலகின் நண்பர்கள்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் சார்பில்...

குப்பை இருக்கும் இடம் தேடி… மதுரையை மாற்ற, களத்தில் இறங்கிய மாநகராட்சி ஆணையர் | Photo Album

மதுரை: விபத்தில் உயிரிழந்த காவலர்; குடும்பத்துக்காக ஒன்றிணைந்து ரூ.22 லட்சம் திரட்டிய...

900 மாணவிகள்… மூன்றே கழிப்பறைகள்… தவிக்கும் புதுக்கோட்டை மாணவிகள்; முதல்வருக்கு கோரிக்கை

தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை இன்றி வெறிச்சோடிப் போய்க்கிடக்கும்...

Nepal Flood: நேபாளம் வெள்ளப் பெருக்கு; பீகாருக்கு அச்சுறுத்தல்!| live

நேபாளம் வெள்ளப் பெருக்கால் பீகாருக்கு அச்சுறுத்தல்!அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று...