10
June, 2026

A News 365Times Venture

10
Wednesday
June, 2026

A News 365Times Venture

“ 'இனி அப்படி நடக்காது'ன்னு சொன்னீங்க, ஆனா இப்போ..!"- தமிழ்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து கனிமொழி

Date:

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில், வந்தே மாதரம் முதலாவதாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது.

இந்த விவகாரம் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இனிமேல் இதுபோன்ற ஒரு செயல் நடக்காது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்திருந்தார்.

பதவியேற்றுகொண்ட அமைச்சர்கள்

இந்நிலையில் இன்று 23 தமிழக அமைச்சர்கள் பதவியேற்ற விழாவிலும், அதேபோல மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு எதிராக திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இரண்டாவது முறையாக தவெக அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் வகையில் மூன்றாவதாகப் பாடப்பட்டிருக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

சென்ற முறை இதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்ட போது, ‘இனி அவ்வாறு நடக்காது’ என்று கூறிய தவெக அரசு, தற்போது கண்டும் காணாமல் அமைதி காப்பது எதனால்?” என்று தவெக அரசை சாடியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"காங்கிரஸ் நிர்வாகிகளை தவெக-வில் இணைப்பதை ஏற்க முடியாது" – முதல்வர் விஜய் மீது காங்கிரஸ் அதிருப்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரை வீழ்த்திய ஈரான்; 'தற்காப்புத் தாக்குதல்' நடத்திய அமெரிக்கா

ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா. நேற்று ஈரான், அமெரிக்க ராணுவத்தின்...

'அரசை விமர்சித்த டிவி சானல்கள் அரசு கேபிளில் முடக்கமா?' – எதிர்க்கட்சிகள் கண்டனம்; ராஜ்மோகன் பதில்

தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ்...

3 செய்தி தொலைக்காட்சிகள் அரசு கேபிளில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்: அரசு விளக்கம்

செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் ...