10
June, 2026

A News 365Times Venture

10
Wednesday
June, 2026

A News 365Times Venture

'இந்திய ரூபாய் ரூ.100-ஐ தொட்டால் தொடட்டும்; வெளிநாடு முதலீடுகள் இந்தியா வரும்!' – பொருளாதார நிபுணர்

Date:

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. 2026-ம் ஆண்டிலேயே ரூ.100-ஐ தொட்டுவிடுமோ என்கிற அச்சம் வேறு இருந்து வருகிறது.

இந்த நேரத்தில், 16-வது நிதி கமிஷனின் தலைவர், நிதி அயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் மற்றும் பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அரவிந்த் பனகாரியா

“மதிப்பிற்குரிய இந்திய ரிசர்வ் வங்கி,

ஒரு டாலருக்கு 100 ரூபாய் என்ற அந்த உளவியல் ரீதியான பயம் உங்கள் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்க விட்டுவிடாதீர்கள். 99, 101-ஐப் போல 100 என்பதும் ஒரு வெறும் எண்தான்.

இந்த எண்ணெய் தட்டுப்பாடு குறுகிய காலமா அல்லது நீண்ட காலமா என்பதைப் பற்றி யோசிக்காமல், இந்தச் சூழ்நிலையில் எடுக்க வேண்டிய சரியான முடிவு ரூபாயின் மதிப்பை அதன் போக்கிலேயே வீழ்ச்சியடைய விடுவதுதான்.

எண்ணெய் தட்டுப்பாடு குறுகிய காலம் (3 மாதம் முதல் ஒரு வருடம் வரை) நீடித்தால்: இந்தச் சூழ்நிலையில், ரூபாய் மதிப்பு இப்போது குறையும்.

ஆனால், எண்ணெய் இறக்குமதிச் செலவு குறைந்து, இந்த மலிவான ரூபாய் மதிப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவை நோக்கி வரும்போது, ரூபாய் மதிப்பு மீண்டும் கணிசமாக மீண்டெழுந்துவிடும்.

எண்ணெய் தட்டுப்பாடு நீண்ட காலம் (ஒரு வருடம் அல்லது அதற்கு மேல்) நீடித்தால்: ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை அனுமதிப்பதைத் தவிர வேறு எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் அது நஷ்டத்தில்தான் முடியும்.

இந்திய ரிசர்வ் வங்கி | RBI
இந்திய ரிசர்வ் வங்கி | RBI

அதைவிடுத்து, ரூபாயின் மதிப்பைத் தக்கவைக்க முயற்சி செய்தால், நம்மிடம் இருக்கும் அந்நியச் செலாவணி இருப்பு முற்றிலும் கரையும் வரை தொடர்ந்து வீணாகிக் கொண்டேதான் இருக்கும்.

மேலும், டாலர் அடிப்படையிலான பாண்டுகளோ அல்லது அதிக வட்டி தரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் டாலர் டெபாசிட்டுகளோ தற்காலிகமாகப் போடும் ஒரு ஒட்டுத் துணியாக (band-aid) மட்டுமே இருக்க முடியுமே தவிர நிரந்தரத் தீர்வாகாது.

எப்போதாக இருந்தாலும், ஒரு டாலருக்கு 100 ரூபாய் என்ற அந்த உளவியல் தடையை நீங்கள் கடந்துதான் ஆக வேண்டும்.

இது 2013 கிடையாது: 2013-ல் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. ஆனால், உங்களுடைய துல்லியமான பணவியல் மேலாண்மைக்கு புண்ணியத்தில் இப்போது அப்படிப்பட்ட நிலைமை இல்லை.

எனவே, ரூபாய் மதிப்பு குறைவதால் ஏற்படும் ஓரளவிலான பணவீக்க அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ளும் நல்ல நிலையில் இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது.

இந்திய ரூபாய் வீழ்ச்சி
இந்திய ரூபாய் வீழ்ச்சி

டாலர் பாண்டுகள் மற்றும் அதிக வட்டி தரும் என்.ஆர்.ஐ டாலர் டெபாசிட்டுகள்: இந்தியா தனது சொந்த அந்நியச் செலாவணி இருப்பின் மூலம் ஈட்டும் வட்டியை விட, இவற்றுக்கு மிக அதிகமான வட்டியை நாம் செலுத்த வேண்டியிருக்கும்.

இது மிகவும் செலவு பிடிக்கும் ஒரு வழிமுறை. சுருக்கமாகச் சொன்னால், இது இந்தியாவின் பணப் பலனைப் பணக்கார என்.ஆர்.ஐ-களுக்கு அள்ளிக் கொடுப்பதற்குச் சமம்.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"காங்கிரஸ் நிர்வாகிகளை தவெக-வில் இணைப்பதை ஏற்க முடியாது" – முதல்வர் விஜய் மீது காங்கிரஸ் அதிருப்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரை வீழ்த்திய ஈரான்; 'தற்காப்புத் தாக்குதல்' நடத்திய அமெரிக்கா

ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா. நேற்று ஈரான், அமெரிக்க ராணுவத்தின்...

'அரசை விமர்சித்த டிவி சானல்கள் அரசு கேபிளில் முடக்கமா?' – எதிர்க்கட்சிகள் கண்டனம்; ராஜ்மோகன் பதில்

தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ்...

3 செய்தி தொலைக்காட்சிகள் அரசு கேபிளில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்: அரசு விளக்கம்

செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் ...