25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு… அதிகரிக்கப்படும் பாதுகாப்பு; பிரதமர் மோடியின் பயணங்கள் ஒத்திவைப்பு!

Date:

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ – ஐ வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது இந்தியா.

“இந்தியாவின் இந்தப் போர் செயலுக்கு தக்க பதிலடியை பாகிஸ்தான் கொடுக்கும்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இதனால், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.

இதனையடுத்து, தற்போது, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மோடி – புதின்

மேலும், இந்த மூவரும் அடுத்து சில நாட்களுக்கு முக்கிய அலுவல் பணிகளில் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால், இந்த மாதத்தில் மோடி செல்லவிருந்த குரோஷியா, நார்வே, நெதர்லாந்து நாடு பயணங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த முடிவு உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூருக்கு முன்பே, மே மாதம் 9-ம் தேதி மோடி செல்லவிருந்த ரஷ்ய பயணம் ரத்து செய்யப்பட்டது.

போர் மற்றும் போர் பதற்ற நேரங்களில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும். அதனால் தான், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தளபதி விஜய்…'- பேசிய காங்கிரஸ் கவுன்சிலர்; கூச்சலிட்டு அவையை முடக்கிய திமுகவினர்! – என்ன நடந்தது?

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. இந்தக்...

பாமக: மனதை மாற்றிய தேர்தல் தோல்வி! – கண்கலங்கிய ராமதாஸின் காலில் விழுந்த அன்புமணி – பின்னணி என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான...

அடிக்கடி மாறும் தலைவர்கள்; 20% எம்பி-க்கள் நினைத்தால் பிரதமர் காலி… இங்கிலாந்து தேர்தல் சீக்ரெட்!

பிரதமர் ராஜினாமா!16-ம் நூற்றாண்டில் கடல் வழியே புதிய நாடுகளைக் கண்டறியத் தொடங்கிய...

“த்ரிஷா படத்தை வச்சே ஆகணும்'னு நான் ஏன் சொன்னேன்னா.?' – காரைக்குடி மாநகராட்சி கவுன்சிலரின் பதில்

காரைக்குடி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் என்றாலே விவாதங்களுக்கும் சலசலப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது....