16
April, 2026

A News 365Times Venture

16
Thursday
April, 2026

A News 365Times Venture

WAQF Bill: “இஸ்லாமியர்களுக்கு விஜய் உறுதுணையாக இருப்பார்'' – தவெக ஆர்ப்பாட்டத்தில் ஆனந்த்

Date:

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் பனையூர் ஜங்ஷனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தவெக ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆனந்த், “இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொண்டு வந்திருக்கும் வக்ஃப் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் இது சம்பந்தமாக நேற்று விபரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இஸ்லாமியர்களுக்கு தவெக கட்சியும், எங்கள் தலைவர் அவர்களும் உறுதுணையாக இருப்போம். இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொண்டு வந்திருக்கும் இந்த வக்ஃப் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

இந்த சட்டத்தில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று இஸ்லாமியர்கள் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வருகின்றனர். ஆகவே நாங்களும் மற்றவர்களைப் போல வந்தோம், போனோம் என்று இருக்க மாட்டோம்.

ஆனந்த்
ஆனந்த்

அவர்களுக்கு நாங்கள் உறுத்துணையாக இருப்போம். மக்களின் விருப்பத்தை செயல்படுத்தும் வகையில்தான் அரசு இருக்க வேண்டும்.

இஸ்லாமியர்களைப் பாதிக்கும் இந்த சட்டத்தை அவர்கள் திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக தலைவரின் வழிகாட்டுதலின் படி ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் நடைபெறும். தலைவரின் அறுவுறுத்தலின் படி இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தெலங்கானா Vs பாகிஸ்தான்? – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் பேச்சால் பரபரப்பு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மக்களவை...

"அண்ணன் மேல் ஒரேயொரு குற்றச்சாட்டுதான் இருக்கிறது; அது..!"- ஸ்டாலின் முன் பேசிய பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள...

'ஸ்டாலின் சார் மாதிரி பொய் சொல்லமாட்டோம்…' – தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

சென்னையிலுள்ள தனியார் விடுதியில் தவெக தலைவர் விஜய் விவாசியிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள்...