21
September, 2026

A News 365Times Venture

21
Monday
September, 2026

A News 365Times Venture

'உட்கார கூட இடமில்ல…' – முதல்வர் விஜய் ஆய்வு செய்த எழும்பூர் மருத்துவமனையின் அவலநிலை என்ன?

Date:

சென்னை எழும்பூரில் உள்ள பழமையான மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய் சமீபத்தில் ஆய்வு செய்திருந்தார். முதல்வரின் ஆய்வுக்குப் பிறகுமே அடிப்படை வசதிகள் முறையாகச் செய்து தரப்படவில்லை என மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முதல்வர் ஆய்வு செய்த போது

சென்னை எழும்பூரின் பாந்தியான் ரோடில் இருக்கக்கூடிய மகப்பேறு மருத்துவமனை 1844 இல் கட்டப்பட்டது. சென்னை மட்டுமல்லாமல் சென்னையைச் சுற்றியிருக்கக்கூடிய மாவட்டங்களிலிருந்தும் ஏழை எளிய பெண்கள் இங்கே பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை எனச் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியான நிலையில், முதல்வர் விஜய் இந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்திருந்தார். மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களிடம் குறைகளையும் கேட்டிருந்தார். ஜூலை 8 ஆம் தேதி முதல்வர் ஆய்வுக்குச் சென்ற நிலையில், இன்று அந்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம்.

பாந்தியன் ரோடில் உள்ள மருத்துவமனையின் நுழைவு வாயில் வழியே உள்ளே செல்லும்போதே அதிர்ச்சியாக இருந்தது. பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் விடுமுறை நாட்களில் கூட்டம் கூடி காத்திருப்பதைப் போல மருத்துவமனை வளாகத்தில் கூட்டம் காணப்பட்டது.

நெருக்கியடித்துக் கொண்டு பேப்பர்களையும் போர்வைகளையும் விரித்து ஈ மொய்க்க மக்கள் தரையில் படுத்திருந்தனர். இன்னும் சிலர் அந்த நெரிசலுக்குள்ளும் கைக்குழந்தையோடு அமர்ந்திருந்தனர். அசௌகரியமான அந்த இடத்தில் காத்திருந்த மக்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

‘இந்த ஆஸ்பத்திரில சிகிச்சையெல்லாம் ஒழுங்கா கொடுக்குறாங்க. அதனாலதான் ஜனங்க எங்கெல்லாமோ இருந்து இங்க பிரசவத்துக்காக வராங்க. ஆனா, புள்ளத்தாச்சிங்க கூட துணைக்கு வர உறவினர்களுக்கு இங்க தங்குறதுக்குச் சரியான வசதி இல்லை.

என் மகளுக்குப் பிரசவம் பார்க்குறதுக்காக 8 நாள் இங்க சேர்த்திருந்தேன். முதல் 4 நாள் கழிச்சுதான் அவளுக்கு குழந்தை பிறந்துச்சு. அந்த நாலு நாளும் எங்க யாரையும் உள்ள அனுமதிக்கல. குழந்தை பிறந்த பிறகுதான் உள்ள அனுமதிச்சாங்க. இதுல கூட எங்களுக்குச் சங்கடம் இல்ல. எங்க புள்ளைங்க பாதுகாப்பா இருந்தா போதும். ஆனா, ஆஸ்பத்திரி வளாகத்துல கூட எங்களுக்குத் தங்குறதுக்கு முறையான வசதி இல்ல.

தகர தட்டி போட்டு ஒரு செட்டு மாதிரி போட்ருக்காங்க. அதுல ஒரு 50 பேர்தான் இருக்க முடியும். ஆனா,100-200 பேர் அங்க நெருக்கடிச்சு படுத்திருப்போம். கொசுக்கடி தாங்க முடியாது. குடிக்க தண்ணீ வசதியும் ஒரு இடத்துல இருக்கும், ஒரு இடத்துல இருக்காது. மழை பெஞ்சா அந்தத் தகர தட்டி உள்ள கூட உட்கார முடியாது.

எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை
எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை

இப்ப கூட பாருங்க இந்தத் தகர செட் உள்ள இடம் இல்லாம எத்தனை பேரு வெளியே வராண்டால படுத்திருக்காங்கனு. உள்ள எங்க புள்ளைங்களைச் சேர்த்திருக்கோம். அவங்களுக்கு எதாச்சு ஒரு அவசரம்னா நாங்கதான் கூட இருந்து பார்த்துக்கணும். ஆனா, நாங்க தங்குறதுக்கு ஒரு சுகாதாரமான இடம் இங்க இல்லை.

குழந்தை பிறந்து 15 நாள் கழிச்சு பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வர சொல்றாங்க. கைக்குழந்தையைத் தூக்கிக்கிட்டு வரோம். அப்பவும் நாங்க இந்தத் தகர செட்டுக்குள்ளயும் வராண்டாவுலயும்தான் காத்துக் கிடக்க வேண்டியிருக்கு. குழந்தைகளைப் பாதுகாப்பா வச்சுக்கிட்டு உட்கார கூட இடமில்ல. கைக்குழந்தைகளுக்கு எதுவும் கிருமி தொற்றிடுமோன்னு பயமா இருக்கு” என்கின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல்வர் இந்த மருத்துவமனையில் ஆய்வு செய்திருக்கிறார். சில தினங்களுக்கு மாநகராட்சி ஆணையர் மருத்துவமனையில் ஆய்வு செய்திருக்கிறார். ஆய்வுகள் தொடர்கின்றன. மக்களை அவதிப்படுத்தும் பிரச்னைகள் தீரவில்லையே!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"முதல்வர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல"- ஸ்டாலின் சாடல்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி...

ஹார்முஸில் தொடங்கிய பிரச்னை: France-ல் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு; இந்தியாவுக்கும் சிக்கல்?

ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் உலக நாடுகளைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.ஹார்முஸ் நீர்ச்சந்தி...

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மக்கள், பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர்...

"ஆதரவு தரோம்னு சொல்லிட்டு சிலர் நைட்டோட நைட்டா ஓடிட்டாங்க.!"- தவெக கூட்டணியை விமர்சித்த உதயநிதி

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட - ஒன்றிய...