2
July, 2026

A News 365Times Venture

2
Thursday
July, 2026

A News 365Times Venture

VBGRAMG திட்டத்துக்கு ஒப்புதல்: `வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள்? தருகிற நிதியையும்…' – துரை வைகோ

Date:

முதல்வர் விஜய் தலைமையில் தவெக நடத்திய தோழமை கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, மதிமுகவின் முதன்மைச் செயலாளரும் எம்.பியுமான துரை வைகோவிடம் பேசினோம்.

மதச்சார்பின்மை, சமூகநீதி எல்லாம் சரிதான். ஆனால், மாநில சுயாட்சி, மாநில உரிமை விவகாரத்தில் தவெக அரசு சறுக்க தொடங்கியிருக்கிறதே. பல மாநிலங்கள் எதிர்க்கும் VBG – RAM – G திட்டத்தை அமல்படுத்திவிட்டார்களே?

“வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள்? நாடாளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது. நானே அந்த மசோதாவை எதிர்த்து பேசியிருக்கிறேன். மாநிலங்கள் இந்த திட்டத்துக்காக 40% நிதியை கொடுக்க வேண்டும் என்பதை ஏற்கவே முடியாது. ஆனால், அதற்காக முரண்டு பிடித்து கொண்டு நின்றால் அவர்கள் தருகிற நிதியையும் தரமாட்டார்கள்.

அப்படி நடக்கும்பட்சத்தில் இந்த வேலைவாய்ப்பு திட்டத்தை நம்பியிருப்பவர்களின் நிலை என்னவாகும்? அதையெல்லாம் மனதில் வைத்துதான் அந்த திட்டத்தை தவெக அரசு அமல்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டம் மட்டுமில்லை மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டமாக இருந்தாலும் கூட்டணியாக ஒன்றாக நின்று எதிர்ப்போம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`ஹார்ட்டின் இட்லி, மட்டன் பிரியாணி, பீட்ரூட் அல்வா' – தவெக 'இணைப்பு விழா'வில் காலை, மதிய மெனு லிஸ்ட்! | Live Updates

சாத்தூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ விலகல்! சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ-வும், மாநில அம்மா...

"அதிமுக என் உயிருக்கும் மேலானது; ஆனால்…" – கட்சியிலிருந்து விலகிய MSM ஆன்ந்தன் சொல்வது என்ன?

அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்....

ஹே ராம்..!

Source link

'லஞ்சம், ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் அளிக்கலாம்..!' – பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ்

கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழல்களால்...