2
July, 2026

A News 365Times Venture

2
Thursday
July, 2026

A News 365Times Venture

'லஞ்சம், ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் அளிக்கலாம்..!' – பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ்

Date:

கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழல்களால் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், தன்னிடமோ அல்லது லஞ்ச ஒழிப்பு (DVAC) காவல்துறையினரிடமோ புகார் கொடுக்கலாம் என பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `தமிழ்நாடு அரசின் நிர்வாகம் மிக நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சலைத்துறையில் மையப்படுத்தப்பட்ட ஊழல்கள், திட்டமிடப்பட்ட விதிமீறல்கள், நிர்ணயிக்கப்பட்ட லஞ்சத்தொகை எனப் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

ஆதவ் அர்ஜுனா

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் ஒப்பந்ததாரர்களை அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள் அவர்களின் குடும்ப உறவுகள், அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள், ஒப்பந்தம் தருவதாக வாக்குறுதி கொடுத்து பணம் வாங்கியுள்ளனர். பலரிடம் பணத்தையும் பெற்றுக் கொண்டு முறையாக வேலைகளையும் ஒதுக்காமல் ஒப்பந்ததாரர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பான பல புகார்கள் தற்போது எங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. மேலும், இதுபோல் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், என்னிடமோ அல்லது லஞ்ச ஒழிப்பு (DVAC) காவல்துறையினரிடமோ புகார் கொடுக்கலாம். என்னிடம் நோடியாகவோ அல்லது minister.pwd.hd tn@gmail என மின்னஞ்சலிலோ புகார் தெரிவிக்கலாம்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

புகார் தெரிவிப்பவர்கள் பற்றிய விபரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களுக்குத் தேவையான சட்ட பாதுகாப்பும் வழங்கப்படும். விரைவில் அவர்கள் இழந்த பணத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில், இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது. ஒப்பந்தங்கள் அனைத்தும் நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஹே ராம்..!

Source link

`தவெக ஆட்சியைக் கவிழ்க்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதியா?' – வெளியாகும் அதிர்ச்சித் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான இளையராஜா-வை தவெக அரசுக்கு...

`தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகள் லாபம்தான் அரசுக்கு முக்கியமா?'- சீமான் சாடல்

`அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்'...

`அந்தப் பதவிக்கு சம்பளம் 10,000 ரூபாய்.!' – முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேட்டி

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணா...