29
September, 2026

A News 365Times Venture

29
Tuesday
September, 2026

A News 365Times Venture

U-Turn ஆட்சி: `ஜோசியர் முதல் RTI வரை' – தவெக அரசின் 'நிர்வாகத் தடுமாற்றமா?'

Date:

தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தொடர்ந்து நிர்வாகச் சிக்கல் நிலவுகிறது என்ற குற்றச்சட்டு தொடர்ந்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அறிவித்து பின்னர் திரும்பப் பெறப்பட்ட உத்தரவுகள் பட்டியலில் ஜோதிடர் நியமன உத்தரவு, இடதுசாரிகள் கணக்கெடுப்பு உத்தரவு, மாணவர் போராட்டம் தடுப்பு உத்தரவு, தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்கும் டெண்டர், மேல்மா சிப்காட் நிலம் கையகப்படுத்துதல், காலை உணவு விரிவாக்கத்திற்கான அடிப்படை வசதிகளை ஆசிரியர்கள் சொந்த நிதியில் மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு, சொத்து வரி உயர்வு உத்தரவு, சட்டம் ஒழுங்கு தகவல்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் விலக்கு அளிக்கும் அரசாணை என பட்டியல் நீள்கிறது.

முதல்வர் விஜய்

அதேநேரம், எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் நடுநிலையாளர்களிடமும் அரசின் இந்தச் செயல்பாடுகள் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. உண்மையில் தமிழக அரசில் என்ன நடக்கிறது? அரசின் ஒவ்வொரு முடிவும் முதலமைச்சரின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் செல்கிறதா? நிர்வாகத்தில் தெளிவின்மை தொடர்வர்து ஏன்? எனப் பல்வேறு கேள்விகள் தவெக அரசை சுற்றி வட்டமடிக்கின்றன. எனவே, இது தொடர்பாக பேசுவதற்கு மூத்த ஊடகவியலாளர் நாதனிடம் பேசினோம்.

“ தற்போது நிலவும் இந்த நிர்வாகச் சிக்கல் அரசின் அனுபவமின்மையையே காட்டுகிறது. இப்போது இருக்கும் அமைச்சர்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது? ஜோசியர் நியமனம் முதல் ஆர்.டி.ஐ விவகாரம் வரை பின்வாங்கியது அனைத்தும் அனுபவமோ, போதிய நிர்வாக திறனோ இல்லாததன் விளைவு. உதாரணமாக தமிழ்நாட்டின் மின்சாரப் பிரச்னையை எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டின் மின் தேவை என்ன? எவ்வளவு நாம் உற்பத்தி செய்கிறோம்? எவ்வளவு வெளியிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்பது நிர்வாகக் கணக்கு.

ஆர்.டி.ஐ

ஆனால், கடந்த திமுக – அதிமுக ஆட்சியில் இருந்ததை விட இப்போது மின்சாரப் பிரச்னை எவ்வளவு இருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள். இப்படித்தான் இருக்கிறது இந்த அரசின் ஒவ்வொரு துறையின் செயல்பாடுகளும். கரூர் விவகாரத்திலேயே என்ன செய்வது எனத் தெரியாமல் 72 மணி நேரத்துக்கு வெளியேவே வராமல் இருந்தார். அந்தக் கட்சியின் நிர்வாகிகளும் காணாமல் போனார்கள். ஆட்சிக்கு வந்தப் பிறகும் அதுதான் தொடர்கிறது.

ஆர்.டி.ஐ விவகாரத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். முதல்வர் விஜய்-யிடம் இந்த சட்டம் குறித்து சொல்லும்போது ‘இந்த சட்டத்தைக் கொண்டுவந்தால் நம் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தை பெரிதாக வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம்’ எனக் கூறி ஒப்புதல் பெற்றிருப்பார்கள். இவர் கருணாநிதி , ஸ்டாலின், ஜெயலலிதா, எடப்பாடி போன்று ஆராய்ந்து அனுமதி கொடுத்திருக்க சாத்தியம் குறைவு. மேலும், இவருக்கு இந்தச் சட்டம் குறித்த போதுமான புரிதல் இருந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.

ஊடகவியலாளர் நாதன்
ஊடகவியலாளர் நாதன்

எனவே, ஜான் ஆரோக்யசாமி போன்றோரின் வழிகாட்டுதலில்தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது. அதனால் நிர்வாகத் தடுமாற்றம் தொடர்கிறது. இது இப்படியே தொடர்ந்தால், அதன் எதிர்வினையை அரசு சந்திக்கும். ஏற்கெனவே அரசின் மீதான நம்பிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக ஆண்களிடம் அதிருப்தி நிலவுவதை காணமுடிகிறது. பெண்களிடம் இந்த அரசு நிர்வாகச் சிக்கல் சேர்வதற்கு இன்னும் காலம் எடுக்கும்.” என்றார்.

த. வெ. க தரப்பில் இது குறித்து நாம் பேசும் போது, ” நிர்வாக ரீதியாக பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. எனினும் அது எல்லாவற்றையும் கடந்து அரசு கொண்டுவரும் ஒரு திட்டத்திலோ ஒரு அறிவிப்பிலோ குறிப்பிட்ட அம்சம் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்குகிறது அல்லது எதிர் குரல் இருக்கிறது என்னும் விவகாரம் வரும்போது இந்த அரசு விரைந்து செயல்பட்டு அதற்கான தீர்வை காண்கிறது. எந்த நேரத்திலும், ‘நாம் கொண்டு வந்து விட்டோம்’ என்பதற்காக அந்தத் திட்டத்தை வலிந்து மக்களிடம் திணி ப்பது இல்லை. அதனால் சில விஷயங்கள் நிர்வாகக் குளறுபடி போல் தோன்றும். ஆனால் அடிப்படையில் மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதே அரசாங்கத்தின் முதல் பணி. அதன்படியே இந்த அரசு செயல்படுகிறது” என்கிறார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`'மாமா' என்று நீ அழைத்த நபர் உனக்கு மிக மோசமான செயலைச் செய்தார்; ஆனால் நீ..!' – நெகிழ வைத்த தீர்ப்பு

டெல்லியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 2023ம் ஆண்டு பாலியல்...

முதல்வர் விஜய் மதுரை விசிட் : ரோடு ஷோ ஆல்பம்!

முதல்வர் களைகட்டிய ரோடு ஷோ முதல்வர் களைகட்டிய ரோடு ஷோ Source link

“பணம், பதவிக்கு ஆசைப்பட்டு தவறான வழியில் செல்லாதவர் ரஜினிகாந்த்’’ – வேலூர் ரசிகர் மன்றம் பெருமிதம்!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் `அன்புத்...

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் டு மீனாட்சியம்மன் கோவில் – முதல்வர் விஜய்யின் மதுரை விசிட் பிளான்

தமிழக அரசு சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க...