29
September, 2026

A News 365Times Venture

29
Tuesday
September, 2026

A News 365Times Venture

“பணம், பதவிக்கு ஆசைப்பட்டு தவறான வழியில் செல்லாதவர் ரஜினிகாந்த்’’ – வேலூர் ரசிகர் மன்றம் பெருமிதம்!

Date:

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் `அன்புத் தலைவருக்கு நன்றி’ என்கிற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மன்றத்தின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி, “மாணவர்களின் படிப்பிற்கு உதவினால் அது அவர்களின் அடுத்தடுத்த வம்சத்திற்கே ஒளி விளக்காக அமையும்.

தலைவர் ரஜினிகாந்த் எத்தனையோ உதவிகள் செய்து வந்தாலும் கல்விக்கு செய்யும் தொண்டு மாணவர்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். தலைவர் ரஜினிகாந்த் ஒரு யோகி. அவரின் உதவி கிடைப்பது பெரும் பாக்கியம். தகுதியான மாணவர்கள் பயன் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

கூட்டம்

தலைவர் எப்போதுமே செய்த உதவிகளை வெளியே சொல்வதில்லை. இது அவரின் எளிமை. விளம்பரம் இல்லாமல் பல நற்பணிகள் செய்து வரும் எங்கள் தலைவர் ஒருவேளை அரசியலுக்கே வந்திருந்தாலும்கூட ஏற்கெனவே செய்த நற்பணிகளை சுட்டிக்காட்டி அரசியல் செய்திருக்க மாட்டார்.

`ரஜினியாக வாழ்வது மிக மிக கடினம்’ என்று பெரியவர்களும், நல்லவர்களும் சொல்கிறார்கள். ஆனால், `அதை விடக் கடினம் ரஜினியின் ஆதரவாளராக இருப்பது’ என்பார்கள். ஆம் தர்மத்தின் வழியில் பயணிப்பவர்களின் கஷ்டம் என்பது வைரம் போன்றதாகும். அதனால்தான் அதற்கு வலிமையும் அதிகம்.

பதவிக்கோ, பணத்திற்கோ ஆசைப்பட்டு தவறான வழியில் செல்லாமல் எங்களுக்கு நல்வழி காட்டும் இதுபோன்ற தலைவரை ஆத்மார்த்தமாக ஏற்றுள்ளதை பெரும் பாக்கியமாக எண்ணுகிறேன். மாணவச் செல்வங்கள் ஆகிய நீங்களும் குரு துரோணரின் மாணவர்களை போல அனைவரும் ஒவ்வொரு துறையிலும், பல கோணங்களில், பல திறமைகள் கொண்டிருந்தாலும் அனைவரின் உள்ளத்திலும் ஒரு தர்மன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

சோளிங்கர் என்.ரவி

அது போலவே தலைவரின் ஆசீர்வாதத்தில் பயிலும் நீங்கள் கல்வியில் சிறந்து விளங்கி தலைவரின் கல்வி சேவைக்கு மகுடம் சூட்டும் வகையில் இருந்தால், உங்களை உங்கள் குடும்பத்துடன் தலைவரைச் சந்திக்க வைக்க என்னால் முடிந்த முயற்சியை செய்வேன்’’ என்றார். இதைத்தொடர்ந்து `ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெளியீட்டை வரவேற்க தேவையான ஆலோசனைகள் குறித்து மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார் சோளிங்கர் என்.ரவி.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

முதல்வர் விஜய் மதுரை விசிட் : ரோடு ஷோ ஆல்பம்!

முதல்வர் களைகட்டிய ரோடு ஷோ முதல்வர் களைகட்டிய ரோடு ஷோ Source link

U-Turn ஆட்சி: `ஜோசியர் முதல் RTI வரை' – தவெக அரசின் 'நிர்வாகத் தடுமாற்றமா?'

தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தொடர்ந்து நிர்வாகச் சிக்கல் நிலவுகிறது என்ற...

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் டு மீனாட்சியம்மன் கோவில் – முதல்வர் விஜய்யின் மதுரை விசிட் பிளான்

தமிழக அரசு சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க...

மீண்டும் போர்? "நானும், எங்கள் அதிபரும் நியூயார்க் வந்த காரணமே.!" – ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்

கடந்த வாரம் ஈரானும், அமெரிக்காவும் ‘ஈரான் போர் நிறுத்தம்’ குறித்து பாசிட்டிவாகப்...