8
May, 2026

A News 365Times Venture

8
Friday
May, 2026

A News 365Times Venture

TVK: "மக்களின் நல்வாழ்வே எங்களின் ஒரே இலக்கு!" – ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன விஜய்!

Date:

2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிபெருங்கட்சியாக வெற்றியை பதித்திருக்கிறது. 233 தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

சந்தித்த முதல் தேர்தலிலேயே இப்படியான சாதனை வெற்றியைப் பெற்றிருக்கும் விஜய்க்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தவெக தலைவர் விஜய்

நேற்றைய தினம் ராகுல் காந்தியும், பிரதமர் நரேந்திர மோடியும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்கள்.

அவர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் எக்ஸ் பக்கத்தில் தற்போது பதிவிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தி வாழ்த்துக்கு நன்றி சொன்ன விஜய், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் அழைப்பிற்கும், அன்பு மக்களின் நல்வாழ்வே எங்களின் ஒரே இலக்கு. அனைவரது வாழ்த்துகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

பொதுச் சேவையில் மிகச்சிறந்து விளங்குவதிலும், நமது மாநிலத்தின் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதிலும் நாம் என்றும் உறுதியுடன் இருப்போம். அதற்கு அனைவரின் கூட்டு ஒத்துழைப்பும் அவசியமானது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கே நாம் முன்னுரிமை அளிப்போம்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி வாழ்த்து பதிவுக்கு, “கௌரவத்திற்குரிய பிரதமர் மோடி அவர்களே, தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றிகள். நமது மக்களின் நல்வாழ்வே எங்களின் ஒரே இலக்கு.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனில் நாங்கள் கவனம் செலுத்துவோம். இந்த முயற்சியில் ஒன்றிய அரசின் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கேரளம்: `பாஜக 3 இடங்களை வென்றிருப்பது கவலையளிக்கிறது' – தேர்தல் தோல்வி குறித்து பினராயி விஜயன்

கேரளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் 102...

தவெக: “மக்கள் தீர்ப்புக்கு இழைக்கப்படும் அவமதிப்பு!" – நடிகை ஸ்ரேயா சரண் பதிவு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத்...

தவெக: “திமுக – அதிமுக கூட்டணி அமைந்தால் பேரழிவு!” – நடிகர் விஷால் எச்சரிக்கை

தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான சூழல்கள் நிலவி வரும் வேளையில், நடிகர்...

TVK: “2 பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தைக் காக்க…" – எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத்...