11
June, 2026

A News 365Times Venture

11
Thursday
June, 2026

A News 365Times Venture

Trump Vs Zelensky: `அவமரியாதை செய்து விட்டார்' – கொதிக்கும் டிரம்ப்; நன்றி சொல்லும் ஜெலென்ஸ்கி..

Date:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி – இருவருக்கும் இடையே நடந்த முடிந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் தங்களது எக்ஸ் பக்கத்தில் அந்தப் பேச்சுவார்த்தை குறித்து பதிவிட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இன்று வெள்ளை மாளிகையில் மிக அர்த்தமுள்ள சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பில் தெரிந்துக்கொண்ட முக்கியமான ஒன்று, ஒரு அழுத்தமான சூழலில் பேச்சுவார்த்தை இல்லாமல் எதுவும் புரிந்துகொள்ள முடியாது. இந்த பேச்சுவார்த்தை மூலம் அதிபர் ஜெலன்ஸ்கி அமைதிக்கு தயாராக இல்லை என்பதை தெரிந்துகொண்டேன். அமெரிக்கா அவர் பக்கம் இருந்தால், பேச்சுவார்த்தையில் அது அவருக்கு மிகப்பெரிய நன்மையை பயக்கும் என்று நினைக்கிறார். ஆனால், எனக்கோ நன்மைகள் வேண்டாம். அமைதி வேண்டும்.

ஓவல் அலுவலகத்தில் அவர் அமெரிக்காவை அவமரியாதை செய்துவிட்டார். அவர் அமைதிக்கு தயாராகும்போது இங்கே திரும்ப வரலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த அத்தனை ஆதரவுகளுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் ஜெலன்ஸ்கி.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'பிரசவ டாக்டர் இல்லை; தாயின் வயிற்றிலேயே உயிரிழந்த கண்ணகி நகர் குழந்தை!' – உலுக்கும் Spot Report!

`எங்க குழந்தை இந்த உலகத்தை பார்க்குறதுக்கு முன்னாடியே கொன்னுட்டாங்களே....ஏழைங்க உசுருன்னா இவங்களுக்கு...

விழுப்புரம்: மீனவப் பெண்கள் தூக்கு மாட்டும் போராட்டம்; போலிசாருடன் மோதல் | Photo Album

“கடல் பசுவுக்காக மீனவர் வாழ்வாதாரத்தை சிதைக்கலாமா?” - கொதிக்கும் மீனவர்கள்! Source...

ம.பி: பாஜக-வுக்குச் சாதகமாக மாறிய களம்? – காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி?

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின்...