30
September, 2026

A News 365Times Venture

30
Wednesday
September, 2026

A News 365Times Venture

"This guy is a Monster" – சுந்தர் பிச்சை குறித்து Trump; சிரித்தபடி பதிலளித்த Google CEO

Date:

அமெரிக்க அதிபர் Donald Trump, Google CEO சுந்தர் பிச்சையை“Monster” என்று குறிப்பிட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் Trump இந்த வார்த்தையை விமர்சனமாக அல்லாமல், அவரின் செல்வாக்கையும் திறமையையும் பாராட்டும் விதமாகவே பயன்படுத்தினார்.

White House-ல் AI சந்திப்பு!

செப்டம்பர் 29-ம் தேதி White House-ல் AI துறையின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் Trump சந்திப்பு நடத்தினார். Google-ன் Sundar Pichai, Meta-வின் Mark Zuckerberg, Nvidia-வின் Jensen Huang, OpenAI-ன் Greg Brockman, Anthropic-ன் Dario Amodei உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்பத் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் AI-ன் பாதுகாப்பு, நிறுவனங்களின் பொறுப்பு மற்றும் AI வளர்ச்சிக்கான கட்டுப்பாடுகள் குறித்து பேசப்பட்டது. முன்னணி AI நிறுவனங்கள் தங்களது AI அமைப்புகளுக்கு உள்கட்டுப்பாடுகளை உருவாக்குவதுடன், independent auditors மூலம் அவற்றை மதிப்பாய்வு செய்யும் தன்னார்வ ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டன.

“This guy is a monster!”

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய Trump, Pichai-ஐ சுட்டிக்காட்டி, “This guy is a monster, and nobody knows him” என்று கூறினார். சுந்தர் பிச்சையின் பெயர் மற்றும் அவருடைய மிகப்பெரிய தொழில்நுட்ப செல்வாக்கு குறித்து Trump தொடர்ந்து பாராட்டிப் பேசினார்.

Trump-ன் இந்த வித்தியாசமான பாராட்டைக் கேட்ட சுந்தர் பிச்சை சிரித்தபடி பதிலளித்தார். “Hopefully a better tagline than I’m a monster!” என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார். இந்தச் சிறிய உரையாடல்தான் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஒருபுறம் உலகின் முன்னணி AI நிறுவனங்கள் பாதுகாப்பு குறித்து விவாதித்துக் கொண்டிருக்க, மறுபுறம் Google CEO-வை Trump “Monster” என்று அழைத்த இந்த எதிர்பாராத தருணம் White House சந்திப்பின் வைரல் காட்சியாக மாறியுள்ளது.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: போராடிய மக்களை துப்பாக்கியால் சுட்ட காவலர் ராஜா உயிரிழப்பு

2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடைபெற்றது....

தேர்தல் ஆணையம்: “இதுவே தவறு நடந்திருக்கிறது என்பதற்கான சான்று" – திருமாவளவன்

டெல்லியில் இன்று (30-ம் தேதி) 'இந்தியா கூட்டணி' தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது....

INDIA BLOC: “நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை" – ராகுல் காந்தி

டெல்லியில் இன்று (30-ம் தேதி) நடைபெற்ற 'இந்தியா கூட்டணி' தலைவர்களின் கூட்டம்...