30
September, 2026

A News 365Times Venture

30
Wednesday
September, 2026

A News 365Times Venture

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: போராடிய மக்களை துப்பாக்கியால் சுட்ட காவலர் ராஜா உயிரிழப்பு

Date:

2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடைபெற்றது. அத்தொடர் போராட்டத்தின் 100வது நாளான கடந்த 2018, மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தின் போது பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்தனர். அப்போது கலவரம் ஏற்பட்ட நிலையில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போலீஸாரின் தடியடியால் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். துப்பாக்கிச்சூட்டின் போது ஒரு காவலர் மஞ்சள் நிற டி-சர்ட், கருப்பு நிற பேண்ட் அணிந்து, காவல்துறை வேன் மீது ஏறி போராட்டக்காரர்களை நோக்கி சுடும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. அந்த வேன் மீது ஏறி துப்பாக்கி சூடு நடத்தியவர் ஆயுதப் காவலரான ராஜா.

துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் போட்டோக்களும் அப்போதே சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் போலீஸ் வாகனத்தின் மேல்பகுதியில் நின்றிருந்த காவலர் ஒருவர் மஞ்சள், கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்தபடி துப்பாக்கியால் சுடும் அந்த ஒற்றை புகைப்படம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும், பல்வேறு அமைப்புகள் மத்தியில் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தின. பின்னர் துப்பாக்கி சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் நடத்திய விசாரணையிலும் அந்த புகைப்படம், வீடியோக்கள் முக்கிய ஆதாரமாக மாறியிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பான குற்றப்பத்திரிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டார். இந்த சூழலில் தூத்துக்குடியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (29-ம் தேதி) இரவு உயிரிழந்துள்ளார். அவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காவலர் ராஜா உயிரிழந்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"This guy is a Monster" – சுந்தர் பிச்சை குறித்து Trump; சிரித்தபடி பதிலளித்த Google CEO

அமெரிக்க அதிபர் Donald Trump, Google CEO சுந்தர் பிச்சையை“Monster” என்று...

தேர்தல் ஆணையம்: “இதுவே தவறு நடந்திருக்கிறது என்பதற்கான சான்று" – திருமாவளவன்

டெல்லியில் இன்று (30-ம் தேதி) 'இந்தியா கூட்டணி' தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது....

INDIA BLOC: “நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை" – ராகுல் காந்தி

டெல்லியில் இன்று (30-ம் தேதி) நடைபெற்ற 'இந்தியா கூட்டணி' தலைவர்களின் கூட்டம்...