26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

Stalin: `2026 மட்டுமல்ல 31, 36-லும் திராவிட மாடல் ஆட்சி தான்!' – சொல்கிறார் ஸ்டாலின்

Date:

5 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டத்தில் தங்கியிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அரசு மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்‌. நூற்றாண்டு பழைமை வாய்ந்த தாவரவியல் பூங்காவான ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவின் 127- வது மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்

ஊட்டியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” ஊட்டி மலர் கண்காட்சி ஏற்பாடுகள் எதிர்பார்த்த விதத்தை விட மிகவும் சிறப்பான முறையில் இருந்தது. ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டுள்ள நிலையில், இது குறித்து மற்ற மாநில முதலமைச்சர்களுடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தியா கூட்டணி பலவீனமாக இருப்பதாக ப.சிதம்பரம் கூறியிருப்பது அவருடைய கருத்து மட்டுமே. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தமிழ்நாடு மீது தொடர்ந்து சர்வாதிகாரப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. 2026 மட்டுமல்ல 2031, 2036 – லும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மாடல் ஆட்சி தான் தமிழ்நாட்டில் தொடரும் ” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் பேட்டி

எம்.பி ஆ. ராசாவுடன் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சருடன் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். உள்ளுர் மக்கள் பலரும் முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'அப்படி பேசியிருக்கக் கூடாது..!'- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன?

மதிமுக குறித்த தவெக அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு குறித்து அக்கட்சியின் முதன்மைச்...

பரந்தூர்: "நிலத்தைத் திரும்ப ஒப்படைப்பதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும்.!"- பூவுலகின் நண்பர்கள்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் சார்பில்...

குப்பை இருக்கும் இடம் தேடி… மதுரையை மாற்ற, களத்தில் இறங்கிய மாநகராட்சி ஆணையர் | Photo Album

மதுரை: விபத்தில் உயிரிழந்த காவலர்; குடும்பத்துக்காக ஒன்றிணைந்து ரூ.22 லட்சம் திரட்டிய...

900 மாணவிகள்… மூன்றே கழிப்பறைகள்… தவிக்கும் புதுக்கோட்டை மாணவிகள்; முதல்வருக்கு கோரிக்கை

தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை இன்றி வெறிச்சோடிப் போய்க்கிடக்கும்...