26
July, 2026

A News 365Times Venture

26
Sunday
July, 2026

A News 365Times Venture

Russia – Ukraine: முடிவுக்கு வருகிறதா ரஷ்யா vs உக்ரைன் போர்; பேச்சுவார்த்தைக்கு புதின் அழைப்பு!

Date:

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ (NATO) அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்தது.

அதன்பிறகு, எத்தனையோ பேச்சுவார்த்தைகள், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் கண்டங்கள் ஆகியவை எதையும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளாக நிற்காமல் உக்ரைன் மீது போர் நடத்திவருகிறது ரஷ்யா.

இந்த நிலையில்தான், போர் தொடர்பாக உக்ரைனுடன் இஸ்தான்புல்லில் மே 15-ம் தேதி நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்.

ரஷ்யா – உக்ரைன் போர்

இது குறித்து புதின், “மோதலுக்கான மூல காரணங்களை நீக்குவதற்கும், அமைதியை மீட்டெடுப்பதற்குமான முயற்சியாக இஸ்தான்புல்லில் உக்ரைனுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை ரஷ்யா முன்மொழிகிறது.

2022-ல் உக்ரைன்தான் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டது, ரஷ்யா அல்ல. எனவே, எந்த முன்நிபந்தனைகளும் இல்லாமல் உக்ரைன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம்.

ஏற்கெனவே நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், உக்ரைன் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரின் முயற்சியால் ஒரு கூட்டு வரைவு ஆவணம் தயாரிக்கப்பட்டது.

ஜெலன்ஸ்கி (உக்ரைன்) - புதின் (ரஷ்யா)
ஜெலன்ஸ்கி (உக்ரைன்) – புதின் (ரஷ்யா)

ஆனால், மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தலின் பேரில், அது குப்பையில் வீசப்பட்டது என்பதை இங்கு நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். ரஷ்யா பலமுறை போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும், எங்களின் போர் நிறுத்த திட்டங்கள் எதற்கும் உக்ரைன் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

முன்பு, இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 3 நாள்களில், 5 முறை ரஷ்ய எல்லையைத் தாக்க முயற்சிகள் மேற்கொண்டது உக்ரைன்” என்று தெரிவித்திருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இஸ்தான்புல்லில் மே 15-ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்த கையெழுத்தாகலாம் என்று கூறப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கோவை: கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு; 8 பேர் பணிநிடை நீக்கம்

கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது....

“திமுக-வை வழிநடத்த தகுதியானவர் உதயநிதியா? கனிமொழியா? வாக்கெடுப்பு நடத்துங்க" – நிர்மல் குமார்

திருச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `` நீட்...

"எங்களை வெளியேற்ற கூடாது" – தேனியில் கடையடைப்பு போராட்டத்தில் இறங்கிய மலைக் கிராம மக்கள்

தேனி மாவட்டம் வருசநாடு, கடமலைக்குண்டு, மேகமலை, கண்டமநாயக்கனூர் பகுதியைச் சுற்றியுள்ள 50க்கும்...

தொகுதி மறுவரையறை மசோதா: 'அடுத்தகட்ட திட்டம் என்ன?' – கே.சி.வேணுகோபால் பதில்

நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய பா.ஜ.க...