17
October, 2026

A News 365Times Venture

17
Saturday
October, 2026

A News 365Times Venture

RTI விவகாரம்: "எல்லா GO-வையும் ஒளித்து வைப்பது ஏன்?" – தவெக அரசுக்கு உதயநிதி கேள்வி

Date:

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தகவல் சரிபார்ப்பகம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று இந்த டம்மி அரசு பம்மி நிற்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பொய்ச்செய்திகளுக்கு எதிராகப் போரிட, கழக ஆட்சியின்போது தகவல் சரிபார்ப்பு தொடர்பான சர்வதேச அளவிலான நிறுவனங்களில் பங்களிப்புச் செய்த அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு TN Fact Check Unit தொடங்கப்பட்டது.

முதல்வர் விஜய்

அதனை இன்றைய சர்க்கஸ் சர்க்கார், Virtual Abusers – கும்பலைக் கொண்டு Information Integrity Desk என்று மாற்றி இருக்கிறது.

இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எங்கே? இதில் யார் யாரெல்லாம் பொறுப்பில் உள்ளார்கள்? என்னென்ன பணிகளைச் செய்கிறார்கள் ? இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன? என்ற கேள்விகளை எல்லாம் RTI மூலம் ஜீவிதா என்பவர் கேட்டுள்ளார்.

ஆனால், அவர் RTI மூலம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது என்று இந்த அரசு கடிதம் கொடுத்துள்ளது.

Transparent Governance-ஐ தருவேன் என்று வாயால் வடை சுட்ட முதலமைச்சர், தன்னுடைய Advisors நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை எல்லா GO-வையும் ஒளித்து வைப்பது ஏன்?

ரசிகர்கள் என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி – ஆபாசத் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த தகுதியற்ற இணையக் கூலிப்படைக்கு அந்தப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகிவிடும் என்பதாலா?

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

உண்மை எது – பொய் எது என்று சொல்லும் தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களே மக்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லதல்ல.

உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த Dummy அரசு தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும்” என்று விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விழுப்புரம்: மாயமான செஞ்சி சிறுமியைத் தேடும் 100 போலீஸார்! – கதறும் பெற்றோர்; திணறும் காவல்துறை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7...

'நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருக்கிறது'- அன்புமணி விமர்சனம்

சென்னையில் 1,000 'ஏசி' மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை ரத்து...

'மக்கள் சமூக அந்தஸ்துக்காக பொன்னி அரிசி சாப்பிடுகிறார்கள்!' – அமைச்சர் வெங்கட்ரமணன் சர்ச்சை

தமிழகத்தில் விலைவாசி உச்சத்தை தொட்டிருக்கிறது. குறிப்பாக, அரிசியின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்திருப்பதால்...